Tuesday, October 11, 2011

மாயன்

"அட போப்பா.. எப்போபாரு நீயே ஜெய்ச்சுட்டு இருக்க.."

"நீ கொஞ்சம் மாத்தி யோசி மச்சி..." என்று joystickல் அவசரமாக எதோ cheat code அடித்துக்கொள்கிறான்..

"நான் எண்ண பண்ணாலும் உன்னோட influence.."

"eventually வந்துடுதுல்ல?...ஹா ஹா..."

"designலயே எதோ கசமுசாப்பா.."

"தோத்துட்டன்னு ஒத்துக்கிட்டா தேவல"

"எனக்கும் அப்படித்தான் தோணுது."

"ஒத்துக்கிடியே! ஆச்சர்யம்தான்."

"அடுத்த upgradeல , உன்ன மிஞ்சிடறேன்..புதுசா எனக்குன்னு தனி chip request பண்ணிருக்கேன்.."

"அதையும் பாப்போமே.."

"அதுவரைக்கும் உன்னை உந்த பிரபஞ்ச விளையாட்ல சமாளிக்கனுமே... அடுத்த version எப்போ வருது?" என்றார் கடவுள்..

"டிசம்பர் 2012 " என்றது சாத்தான்...

விளையாட்டு தொடர்ந்தது...