Showing posts with label கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம். Show all posts
Showing posts with label கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம். Show all posts

Monday, May 14, 2018

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 27


Image result for three dots

புள்ளிகள் மூன்றும் 
ஆச்சரியக்குறிகளும் 
கைவசம் இருக்கிறது.. 

இந்தக்கவிதைதான்...
அட!!

Thursday, June 29, 2017

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26

ஓரக்கண்ணால் பார்த்தபடி 
ஒன்றரை மாதம்..

ஒருவழியாக தைரியம் சேர்த்து - 
ஒரு மழை மாலையில், தன் காதலை 
ஒப்படைத்தாள் 
ஒருத்தனிடம்..

ஓட்டை பேருந்து நிலையத்தில்,
ஓரடி தூரத்தில் நான்..

ஒன்று சேர்ந்தார்களா?
ஒதுங்கி வாழ்ந்தார்களா?


---

கான்க்ரீட் சுவர் தாண்டி,
குட்டிச்சிறுவன் ஒருவன் - முதன்முதலாய் 
கால் நனைக்க வருகிறான்..

கடலின் மொத்த அழகையும் 
கவிதையாய் கடைந்தெடுத்து - அவன் 
காலடியில் கொட்டுகிறது  - அலை.

கால்களோடு கண்களும் நனைய 
காற்றோடு கலந்தது அவன் சிரிப்பு..

கடலை மென்றபடி, 
காத தூரத்தில் நான்..

Image result for besant nagar beach

---

அலுவல்கள் முடித்த 
ஆண்களும் பெண்களும் - வீட்டின் 
அன்றாடங்களை நோக்கும் மாலை ரயில்ப்பயணம்..
அவரவர் வசதிக்கேற்ப  சிறிது பெரிதென; பவுடர்கள் பழுதடைந்த 
அக்குள் வட்டங்கள்..

ஜன்னலோரம் அவள், 
கண்களோரம் கண்ணீர்...
காரணம் கேட்க வக்கில்லாமல் அருகில் நான்...

இடம் வந்ததும் 
இறங்கிச்சென்றாள். 

இமைகள் உலர்ந்ததா?
இனிமை மலர்ந்ததா? 

இன்று வரை பதில் தெரியாமல். நான்..

---

கடிதம் கொடுத்தவளிடம் 
கை குலுக்கி, "வாழ்த்துக்கள்" சொன்னதாகவும்,

கடல் சிறுவனோடு 
மணல் வீடு கட்டியதாகவும்,

கண்ணீர் குமரியிடம் 
ஆறுதல் கூறியதாகவும் 

சாலையை கடக்கையில், என்னை நானே 
சமாதானப்படுத்தி
சிரித்துக்கொண்டேன்..

---  x ---

எஷ்ட்ரா ஷ்பீடா  ஓட்ட சொல்ல,
யார்ரா இது எரும மாடு மாதிரி?..

"சோப்பு கலர்
சிக்னல் கண்ணுக்கு தெர்ல?" - நடூ ரோட்டுல
சிரிச்சுகினே போவுது பாரு 
சாவு கிராக்கி!

---  x ---

Wednesday, September 14, 2016

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 25




நேற்று பெய்த மழையில் தொகை விரித்து ஆடியவள்,
இன்று வந்த மழையில் குடை பிடிக்கிறாள்..

குழப்பத்தில் மயில்! 

Thursday, March 17, 2016

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 24

சமூகக்கொலைகள் 

அவன் first rank வாங்கிட்டான்.. நீ வாங்கலையே?
அவன் pass ஆகிட்டான்.. நீ pass ஆகலையே?
அவன் வேலைக்கு போயிட்டான்.. நீ எப்போ settle ஆக idea?
அவன் வீடு வாங்கிட்டான்.. நீ எப்போ?


அவன் manager ஆகிட்டான்.. நீ இன்னும் senior தானா?
அவன் ரெண்டு கொழந்தை பெத்துக்கிட்டான்... நீயும் plan பண்ணலாம்ல?
அவன் புள்ள IIT ல.. உன் பையன் எப்படி?
அவன் Euro trip போனானாம்.. நீ திண்டிவனம் கூட போகலையே?

அவன் செத்துட்டான்.. நீ....?

Friday, May 30, 2014

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 22

"ஆணா? பெண்ணா?"

"எந்த ஸ்கூல்?"

"எத்தனையாவது ரேங்க்?"

"இன்ஜினியரிங்கா? மெடிக்கலா?"

"அதுக்குள்ள வேலைக்கு போயிட்டானா?"

"நல்ல சம்பந்தம் வந்துருக்கு.. பேசாம கல்யாணத்த முடிச்சுட வேண்டியதுதான்.."

"பலே! பலே! அப்பா ஆகிட்ட! பொறுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு!!"




"உடம்பு எப்படி இருக்கு?"

"Rice completeஆ விட்ருங்க.. சரிங்களா? "

":அடடா., போன மாசம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு இப்படி ஆகிடுச்சே!"

---------

கேள்விகளுக்குள் சிக்கித்தவிக்கும் வாழ்க்கை..

--------

Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..

Sunday, September 1, 2013

புரிதல்

(படித்ததில் பிடித்தது)


பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்



Who I Am

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!

- பா.கிருஷ்ணன்

Saturday, August 24, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 19

எழுதுகோலில் மசியில்லை
கொட்டிக் கிடக்கும் கவிதைகள்..

விசாரிக்க ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி..
                                


விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி..

இருப்பை உணர்த்த 
சுருங்கி விரிந்தாலும்,
நாட்காட்டியில் மட்டுமே 
பௌர்ணமியும் அமாவாசையும்..

கொள்ளை அழகோடு 
வயதுக்கு வந்தாலும் 
எவரும்   தொட மறுக்கும் 
பருவ மழை ..
                                    
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
நம் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..

Friday, July 19, 2013

கித்துவம் #1



நம்ம ஊர்ல சில பல கல்யாணங்கள் matter-காகவும்  money-காகவும் நடக்கரதுனாலதான், அதை matter+money = matrimony-ன்றாங்களோ?


PS: என் இனிய நண்பர்களே - I am back!




Wednesday, February 13, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 18


தமிழின் ஆறாம் திணை 


'இதயம்'- காதலும் காதல் சார்ந்த இடங்களும்..

காதலர் தின வாழ்த்துக்கள்

Monday, January 28, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 17

"இரு இரு..", என்றது 
இலை..
"இதோ - இரண்டே நிமிடத்தில்
இடைஞ்சல் களைகிறேன்.."

"விடு விடு..", என்றது 
வானம்..
"விருட்டென்று கொஞ்சம் 
சிவந்து கொள்கிறேன்..."

"பொறு பொறு..",என்றது 
ஆறு..
"சற்றே பொறுத்திரு 
இசைந்து தவழ்கிறேன்.."

சிடு சிடு - த்தது  
சூரியன்...
"ஒரே நொடியில் 
மங்கி மிளிர்கிறேன்.."

அலைகள் இல்லாத 
கவலையில், காற்றை 
"கொடு.. கொடு" என்றது 
கடல்..

காற்று தந்த அலையை 
தன்னை 
"தொடு தொடு" என்றது 
கரை 

அலங்கார சடங்குகள் எதிலும் 
அசராமல், என்னை  
"எடு எடு" என்றது 
மலை..

.....





புகைப்படங்களில் அடைக்கப்படும் முன் 
இலைகளுக்கோ 
மலைகளுக்கோ 
நதிகளுக்கோ 
மேகங்களுக்கோ 

யாரேனும் 
புன்னகைக்க அவகாசம் கொடுத்தீர்களா?



Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


Tuesday, November 6, 2012

Monday, August 20, 2012

க(வி)தை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 14

"நயாகரா நயாகராதாண்டா..
பாறைல தெறிக்கும் தண்ணீலயே நனைஞ்சுருவோம்னா பாரேன்.."

"நியூ யார்க்ல இருக்கற சரவண பவன்ல 
நம்மாள் தாண்டா கல்லா கட்டிக்கிட்டு இருக்காரு!"



"அத்த ஏன் கேக்கற..
நூத்தி பத்தாவது மாடில இருந்து எட்டிப்பாக்கரப்போ 
ஒன்னுக்கு வந்ததுதான் மிச்சம்.."

"கொடைக்கனலு என்னடா கொடைக்கனலு..
அங்க சும்மா சுள்ளுன்னு குளுரும் தெரியுமுல்ல?!"

"இந்தா பத்தியா?
நானும் மிக்கி மவுசும் எடுத்துக்கிட்ட போட்டோ!"
காட்டிய புகைப்படத்தில் அவனோடு 
எட்வர்டையோ ஜானயோ மறைத்துக்கொண்டிருந்த 
மிக்கியின் முகமூடியும் சிரித்துக்கொண்டிருந்தது 



"ரோடுன்னா ரோடு..நம்ம ரிங் ரோடுல்லாம் நக்கிட்டு போகணும்..
சோறு போட்டு சாப்பிடலாம்! 
நம்ம ஊர்க்காரனுங்க தேரனும் மாப்ள!"

"இந்த கிராண்ட் கான்யான்ட்றாங்ய..
அத மட்டும் பாத்துட்டோம்னா ஊருக்கு வந்துடலாம்"

"பேசாம நீயும் வந்துட்றா.. 
இங்க இருந்து என்னாத்த கண்ட
வெய்யிலும் புழுதியும்.."

முடிவு 1:

"அதெல்லாம் இருக்கட்டும்டா 
பொங்கல் வரைக்கும் இருந்துட்டு போறது!"

"இல்லடா மாப்ள.. ஆபீஸ்ல பீட்ஸா பார்ட்டி..
வர்ஷா வர்ஷம் நடக்கும்..
மேனேஜர்  கோவிச்சுக்குவாப்டி "

முடிவு 2:

"அதெல்லாம் இருக்கடுமடா..
வா ஜிகிர்தண்டா சாப்டலாம்."



"இல்ல மாப்ள இப்போல்லாம் 
ஜிகிர்தண்டாவ வயிறு சேத்துக்க மாட்டேங்குது.."

முடிவு 3:

என் நண்பன் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கையில் 
அவன் பன்னிரண்டாம் வகுப்பில்
என்னைவிட குறைவாய் 
மதிப்பெண் எடுத்ததே 
அடிக்கடி நினைவில் வந்து போனது..


Monday, August 13, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 13




கீழே ஒரு நீள் செவ்வகம் விட்டு,
மேலிருக்கும் இரு 
முனைகளிலும் 
முக்கோணம் செய்து..

விடப்பட்ட செவ்வகத்தை இரு புறமும்
நூற்றெண்பது டிகிரி மடக்கி,
நீட்டி நிற்கும் தாளினை மீண்டும்  மடக்கி,
சதுரமாக்கி..




பாதியை மடக்கி,
மீதியை பின் மடக்கி,
மேலும் மடக்கி,
கீழும் மடக்கி,
விரித்து - ஒரு வழியாக 

கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்?