Tuesday, May 8, 2018

பரப்பார்வை - 2: கமல் ரஜினி...காதலா காதலா!

"காதலா காதலா" திரைப்படத்திற்கு 20 வயதாகிறது!!!

கமலின் உச்சம் 1985-ல் இருந்து 2003 வரை எனக்கருதலாம். அந்தக்காலகட்டத்தில் தான் ஒரு 'சீரியஸ்' படம், அடுத்து ஒரு 'காமர்ஷியல்' படம் என்ற format-ல் இயங்கிக்கொண்டிருந்தார். 'குணா', 'சிங்கார வேலன்'.. 'தேவர் மகன்', 'மகாராசன்'.. 'மகாநதி', 'சதி லீலாவதி' என்று அவர் தொட்டதெல்லாம் துலக்கிய காலம் அது. என்னைப்போன்ற 'ஏலகைவர்க'ளுக்கு விரலை வெட்டாத துரோணராக மாறினார்.

தமிழ் சினிமாவிற்கு கமலின் பரிசோதனை முயற்சிகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அல்லது அதை விட முக்கியம் அவரது 'காமெடி'/கமர்ஷியல் படங்கள். பலரும் அவரது நகைச்சுவை உச்சமாக நினைப்பது "மைகேல் மதன காமராஜ"னைத்தான். எனக்கு அதில் பரிபூரண உடன்பாடு இல்லை. அது அவரது 'கமர்ஸியல்' கோபுரத்தின் மேலடுக்கில் இருந்தாலும், அதன் கலசம் "காதலா காதலா" என்பேன். காரணம் - மை.ம.கா, நகைச்சுவை மட்டும் அல்லாது - சிறந்த பாடல்கள், 4 வேடங்கள் ஏற்று நடித்த 'கிம்மிக்', ஒரு சுவாரசியமான கதை என்று பல அம்சங்கள் இருந்தது. கா.கா. அப்படி இல்லை. "காசுமேல"வைத்தவிர ஹிட் பாடல்கள் இல்லை, பல முகங்கள் கொண்ட கமல் இல்லை, அதி முக்கியமாக கதை, இல்லவே இல்லை. சிரிப்பு மட்டும்தான் குறிக்கோள். ஒவ்வொரு காட்சியும் எவ்வளவு கொள்ளுமோ அவ்வளவு ஜோக்ஸை வைத்திருக்கும் படம். அப்படி, வெறும் "ஜோக்ஸ் பெர் மினிட்' அளவில் மை.ம.கா-வை விட சிறந்தது கா.கா.

ஒரு சிறிய உதாரணம் -
---
கமல், கோவை சரளாவை எதோ சமாளித்துக்கொண்டு இருக்கையில், அவர் இருக்கும் வாடகை பங்களாவின் சொந்தக்காரர், S.N. லட்சுமி (ஒரு முஸ்லீம் தாதி பாத்திரம்) பர்தா அணிந்துகொண்டு வீட்டை திரும்பப்பெற வருகிறார்.

SNL: க்யா க்யா க்யா ஹோ ரஹா ஹை?

கோவை: இரு யார்ரா? கருப்பா காக்கா மாதிரி கா கான்னு கத்திகினு வர்றது?

கமல்: காக்கா-வோட wifeதான்!

கோவை: காக்காவோட wife-ஆ? (தன குழந்தையிடம்).. பார்ரா காக்காவுக்கேல்லாம் wife கிடைக்குது, அம்மாவுக்குத்தான் husband-ஏ கிடைக்க மாட்டேங்குது
---
முழுத் திரைப்படமும் இதோ -


=====

நான் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதிய 'பரப்பார்வை'யை படித்துவிட்டு என்னிடம் சிலர் சில கேள்விகள் எழுப்பினார்கள். அதில் டாப் 5 கேள்விகளை தேர்ந்தெடுத்து, பதில்கள் இதோ..

1. உனக்கு ஏன் மோடி மீது இவ்வளவு கோவம்? Mob mentality-ஆ? வேற யாரவது இவ்ளோ போல்டா டெசிஷன்ஸ் எடுத்து பாத்துருக்கியா? மோடி இந்தியா-வை அமேரிக்கா ஆக்க முயற்சிக்கிறார். உனக்கு புரியலை.

எனக்கு மோடி மீது கோவம் இல்லை. வருத்தம் தான். அவர் இந்தியா-வை அமெரிக்கா ஆக்க முயற்சிக்கிறார் என்பது கட்டுமானத்திலோ, நாட்டு வளங்களை காப்பதிலோ, தொழில்நுட்ப வளர்ச்சியிலோ இருப்பதை நான் எதிர்க்கவில்லை. அவர் மெளனமாக ஆமோதிக்கும் மதவாத செயல்களை நான் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. உதாரணம் - ஆசிபா கற்பழிப்பு (அதை 'கத்துவா சம்பவம்' என்றுதான் கூற வேண்டுமாம். போங்கடா டேய்). நாட்டின் தலைவரின் moral compas சரியாக இல்லை என்றால் அவர் நாட்டை தவறான பாதையில்தான் இழுத்துச் செல்ல முடியும். அவரது moral compas சரி இல்லை என்று சொல்ல நீ யார் என்று கேட்டால், நான் யாருமே இல்லை.. அவர் நடவடிக்கைகளை பரப்பார்வையில் இருந்து பார்ப்பவன். அவ்வளவே.

உம்: https://en.wikipedia.org/wiki/2002_Gujarat_riots

De-Monetization-ஐ பெரிய உதாரணமாக காட்டும் மோடி ஆதரவாளர்களுக்கும், எனக்கும், அதன் காரணமோ, அதன் விளைவோ புரிவதில்லை. அதனால் நான் அதற்க்கு சார்பாகவும் இல்லை, விரோதமாகவும் இல்லை. "Long term-ல நல்லது" என்று குருமூர்த்தி முன்மொழிந்ததை, மோடி ஆதரவாளர்களும் பின்மொழிகிறார்கள். எளிமையான விளக்கம் இன்றளவும் இல்லை. Atleast என்னிடம் இல்லை. தெரிந்தவர்கள் கூறலாம்.

இதில் வெடிக்க என்னவென்றால் - பெரும்பாலான மோடி ஆதரவாளர்கள், அமெரிக்க அதிபரான டிரம்பை எதிர்க்கிறார்கள், விமர்சிக்கிறார்கள். மோடிக்கும் டிரம்பிறக்கும் அதிக வித்தியாசம் இல்லை என்பதை ஏற்க மறுக்கிறார்கள். இருவரும் இன உணர்ச்சியை மக்களிடம் விதைத்தே ஆதரவை சம்பாதித்தவர்கள். ஜெயித்தவர்கள். மோடி நாசூக்காக செய்கிறார், டிரம்ப்... ஹீ ஹீ..

சரிப்பா... மோடி வேண்டாம்.. அப்போ வேற யாரு இருக்கா? என்று கேட்பவர்களுக்கு - பதில், மௌனமே.

2. பிஜேபி மீது அப்படி என்ன வெறுப்பு?

பிஜேபி மீது மட்டும் வெறுப்பு அல்ல. பிஜேபி மீதி கூடுதல் வெறுப்பு அவ்வளவுதான். காரணம் அவர்களது வேர். ஹிந்துத்வம். பிளஸ் - பிஜேபியின் முகங்கள் - அதாவது அந்தக்காட்சியின் கோ.ப.சே.க்கள் - ஹெச்.ராஜா / எஸ்.வீ.சேகர் போன்றவர்கள்.

இருவரும் எடுக்கும் ஆயுதம் "அண்டி இண்டியன்", "ஆண்டி-ஹிண்டு".. எஸ்.வீ. சேகர் ஒரு பேட்டியில் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்ன்னு நீ சொன்னா நான் சும்மா இருக்கணுமா? நீ கிறுக்கன்னு சொல்றேன். நீ அசிங்கம்ன்னு நான் சொல்றேன்" என்கிறார்.

இதற்க்கு பதில் கூறுவதையே தரக்குறைவாக கருதுகிறேன். இருந்தாலும், அவர் கருத்திற்கு பதில் அளிப்பது தேவையாக இருக்கிறது.

"ஜாதியெல்லாம் இருக்கு! சதுர்வர்ணம் இருக்கு! நீ தாழ்ந்தவன், நான் உயர்ந்தவன்.." என்று நீங்கள் முதலில் கூறியதால்தான் இவர்கள் இப்படிக்கூறுகிறார்கள் என்று உங்களுக்கு ஏன் புரியவில்லை? இதற்க்கு மட்டும் விளக்கம் அளியுங்கள். போதும்.

பிஜேபி-யின் உடனதித்தேவை - மற்றவரை மதிக்கும் ஒரு நல்ல பேச்சாளர்.

3. உனக்கெல்லாம் அரசியல் தேவையா?
தேவை இல்லைதான். கொஞ்சம் படிக்கிறேன். ஆதங்கப்படுகிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன். தட்ஸ் ஆல்.


4. காங்கிரஸ் பத்தி சொல்லவே இல்லையே?
படித்துக்கொண்டு இருக்கிறேன். பழைய திருடர்களிடம் புதிய உத்திகள் இல்லாதது போலத்தெரிகிறது.


5. ரஜினியா கமலா?
கமலின் professionalism பிடிக்கும். ரஜினியின் personal life பிடிக்கும். இதில் யாரை தேர்ந்தெடுப்பது?

கமல் ரஜினி பந்தயத்தில்  ரஜினியிடம் எனக்கு இருக்கும் பிரச்சனைகள் -

- 1996ல் முத்து படத்தில் "நான் எப்போ வருவேன் எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" என்றார். பாபாவில் (2002) "லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்" என்றார். இப்போதும் "இதோ வந்துட்டேன்" என்கிறாரே தவிர இன்னும் வர வில்லை. கமல் quantitative measure-ல் இப்போதே முன்னிலை வகிக்கிறார்.

- பொதுவாக கமல் உளறுவார்.. ஆனால் பேச வேண்டிய விஷயத்தை பேசிவிடுவார். ரஜினி பேசுவதையே தவிர்க்கிறார்.

-  திடீர் எம்.ஜி.ஆர் பற்று ரஜினியின் மீது இருந்த credibility-யை கொஞ்சம் உலுக்கியது. மீண்டும் நீண்ட மௌனம். காலா ரிலீஸ் முன்னாடி சர்ச்சை வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ.. டைம் இல்ல தலைவரே. பீ குயிக்!

- ரஜினி-யின் ஆதரவாளர்கள் பெரும்பாலும் பிஜேபி-க்காரர்கள். அவர்களே கமல் எதிர்ப்பையும் பரப்புகிறார்கள் - "கமலுக்கு "கிறிஸ்டியன் மிஷனரி" காசு கொடுக்குது" என்று ஒரு செய்தி வருகிறது. இதில் முதலில் ஏன் மதம் வர வேண்டும்? கொடுத்தால் என்ன? அதை வைத்துக்கொண்டு கமல் என்ன செய்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர யார் கொடுத்தார் என்பது அல்ல! Again பிஜேபி.. again மதம்!

சரி - கமல் என்ன செய்தார்?

- ஒரு கிராமத்தை தத்து எடுத்தார். எதற்க்காக? ஏன் இதை - இப்போது செய்ய வேண்டும்? நீங்கள் நடிகராக இருந்து இதை செய்தால் மக்களிடம் வரும் "ஓ!"விற்கும், நீங்கள் கட்சி துவங்கி அரசியலில் போட்டியிட நினைக்கும் தருவாயில் செய்யும் போது மக்களிடம் வரும் "ஓ!" விற்கும் நிறைய்ய வித்தியாசங்கள் உண்டு.

- கமலின் MNM-த்தின் முதல் சருக்கலாக  நான் கருதுவது - அவர்களின் whistle app. ஏன் இது உங்கள் கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும் ப்ரத்யேகம்? மேலும், இதில் குறைகளை கூறலாம், பதிவேற்றலாம்; ஆம் பிரச்சனை இருக்கிறது என்று உறுதி செய்யலாம். அதோடு இதன் பயன் நின்று விடுகிறது. பிரச்சனைகளை சரி செய்ய இந்த app மக்களையோ, தன்னார்வலர்களையோ திரட்ட வசதி கொடுக்க வில்லை. இதைத்தான் மக்கள் இப்போது facebook-கிலும் twitter-ரிலும்செய்து வருகிறார்களே. பிறகு எதற்கு மய்யம் விசில்?

மய்யம் விசில் வந்ததன் ஒரே நன்மை என்னவென்றால் - இது வந்த இரண்டே நாட்களில் தமிழக அரசு - "நம்ம சென்னை" app வெளியிட்டு இருக்கிறது. அட் லீஸ்ட் கமலுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்று மற்றவர்கள் கொஞ்சம் திருந்தி நடந்தால் நல்லதுதான்...

So - கமலா ரஜினியா - தெரியல. Let us wait and watch.

------

மற்றபடி என்ன...

காவிரி இன்னும் வரவில்லை. இப்ப வா அப்ப வான்னு நம்மை கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் அவரவர் இன்னும் ஆதாயம் தேடிக்கொள்கிறார்கள். கவர்னர், கன்னத்தில் கைவைத்து விரல்களை பொசுக்கிக்கொண்டார். எஸ்.வீ. சேகர் செருப்படிக்கு பயந்து கர்நாடகாவில் தஞ்சம் புகுந்தார். எடப்பாடி பழனிச்சாமி, நிஜ சாமியானார்..
நீட் பிரச்சனையின் அழுத்தத்தில் ஒரு மாணவரின் தந்தை இறந்தே போனார். அந்த மாணவரின் படிப்புச்செலவை தமிழக அரசே ஏற்கிறது... இவை எல்லாம் நான் எழுதிக்கொண்டு இருக்கும்போதே நடந்த 'பிரேக்கிங் நியூஸ்'.

-- இறுதியாக கமல்-கிரேஸி பாணியில் ஒரு ஜோக் (நெட்டில் சுட்டது)--

ஒரு வேளை அனுபவமே இல்லாமல், கமல் முதலமைச்சர் ஆனால் அவரை எப்படி அழைப்பது?


முதல் amateur!!

(தொடரும்...)

கொசுறு: 
நான் கடந்த ஒரு மாதமாக ஒரு பக்கட்; அதிகபட்சம் இரண்டு பக்கட் தண்ணீரில் தான் குளிக்கிறேன். ஷவர் உபயோகத்தை நிறுத்தி விட்டேன்.






No comments:

Post a Comment