"நயாகரா நயாகராதாண்டா..
பாறைல தெறிக்கும் தண்ணீலயே நனைஞ்சுருவோம்னா பாரேன்.."
"நியூ யார்க்ல இருக்கற சரவண பவன்ல
நம்மாள் தாண்டா கல்லா கட்டிக்கிட்டு இருக்காரு!"
"அத்த ஏன் கேக்கற..
நூத்தி பத்தாவது மாடில இருந்து எட்டிப்பாக்கரப்போ
ஒன்னுக்கு வந்ததுதான் மிச்சம்.."
"கொடைக்கனலு என்னடா கொடைக்கனலு..
அங்க சும்மா சுள்ளுன்னு குளுரும் தெரியுமுல்ல?!"
"இந்தா பத்தியா?
நானும் மிக்கி மவுசும் எடுத்துக்கிட்ட போட்டோ!"
காட்டிய புகைப்படத்தில் அவனோடு
எட்வர்டையோ ஜானயோ மறைத்துக்கொண்டிருந்த
மிக்கியின் முகமூடியும் சிரித்துக்கொண்டிருந்தது
"ரோடுன்னா ரோடு..நம்ம ரிங் ரோடுல்லாம் நக்கிட்டு போகணும்..
சோறு போட்டு சாப்பிடலாம்!
நம்ம ஊர்க்காரனுங்க தேரனும் மாப்ள!"
"இந்த கிராண்ட் கான்யான்ட்றாங்ய..
அத மட்டும் பாத்துட்டோம்னா ஊருக்கு வந்துடலாம்"
"பேசாம நீயும் வந்துட்றா..
இங்க இருந்து என்னாத்த கண்ட
வெய்யிலும் புழுதியும்.."
முடிவு 1:
"அதெல்லாம் இருக்கட்டும்டா
பொங்கல் வரைக்கும் இருந்துட்டு போறது!"
"இல்லடா மாப்ள.. ஆபீஸ்ல பீட்ஸா பார்ட்டி..
வர்ஷா வர்ஷம் நடக்கும்..
மேனேஜர்
கோவிச்சுக்குவாப்டி "
முடிவு 2:
"அதெல்லாம் இருக்கடுமடா..
வா ஜிகிர்தண்டா சாப்டலாம்."
"இல்ல மாப்ள இப்போல்லாம்
ஜிகிர்தண்டாவ வயிறு சேத்துக்க மாட்டேங்குது.."
முடிவு 3:
என் நண்பன் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கையில்
அவன் பன்னிரண்டாம் வகுப்பில்
என்னைவிட குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்து போனது..
No comments:
Post a Comment