Monday, August 13, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 13




கீழே ஒரு நீள் செவ்வகம் விட்டு,
மேலிருக்கும் இரு 
முனைகளிலும் 
முக்கோணம் செய்து..

விடப்பட்ட செவ்வகத்தை இரு புறமும்
நூற்றெண்பது டிகிரி மடக்கி,
நீட்டி நிற்கும் தாளினை மீண்டும்  மடக்கி,
சதுரமாக்கி..




பாதியை மடக்கி,
மீதியை பின் மடக்கி,
மேலும் மடக்கி,
கீழும் மடக்கி,
விரித்து - ஒரு வழியாக 

கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்?

1 comment:

  1. உனக்கு காகிதக் கப்பல் செய்யத் தெரியுமா?

    ReplyDelete