Showing posts with label kavithai. Show all posts
Showing posts with label kavithai. Show all posts

Monday, May 14, 2018

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 27


Image result for three dots

புள்ளிகள் மூன்றும் 
ஆச்சரியக்குறிகளும் 
கைவசம் இருக்கிறது.. 

இந்தக்கவிதைதான்...
அட!!

Thursday, June 29, 2017

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 26

ஓரக்கண்ணால் பார்த்தபடி 
ஒன்றரை மாதம்..

ஒருவழியாக தைரியம் சேர்த்து - 
ஒரு மழை மாலையில், தன் காதலை 
ஒப்படைத்தாள் 
ஒருத்தனிடம்..

ஓட்டை பேருந்து நிலையத்தில்,
ஓரடி தூரத்தில் நான்..

ஒன்று சேர்ந்தார்களா?
ஒதுங்கி வாழ்ந்தார்களா?


---

கான்க்ரீட் சுவர் தாண்டி,
குட்டிச்சிறுவன் ஒருவன் - முதன்முதலாய் 
கால் நனைக்க வருகிறான்..

கடலின் மொத்த அழகையும் 
கவிதையாய் கடைந்தெடுத்து - அவன் 
காலடியில் கொட்டுகிறது  - அலை.

கால்களோடு கண்களும் நனைய 
காற்றோடு கலந்தது அவன் சிரிப்பு..

கடலை மென்றபடி, 
காத தூரத்தில் நான்..

Image result for besant nagar beach

---

அலுவல்கள் முடித்த 
ஆண்களும் பெண்களும் - வீட்டின் 
அன்றாடங்களை நோக்கும் மாலை ரயில்ப்பயணம்..
அவரவர் வசதிக்கேற்ப  சிறிது பெரிதென; பவுடர்கள் பழுதடைந்த 
அக்குள் வட்டங்கள்..

ஜன்னலோரம் அவள், 
கண்களோரம் கண்ணீர்...
காரணம் கேட்க வக்கில்லாமல் அருகில் நான்...

இடம் வந்ததும் 
இறங்கிச்சென்றாள். 

இமைகள் உலர்ந்ததா?
இனிமை மலர்ந்ததா? 

இன்று வரை பதில் தெரியாமல். நான்..

---

கடிதம் கொடுத்தவளிடம் 
கை குலுக்கி, "வாழ்த்துக்கள்" சொன்னதாகவும்,

கடல் சிறுவனோடு 
மணல் வீடு கட்டியதாகவும்,

கண்ணீர் குமரியிடம் 
ஆறுதல் கூறியதாகவும் 

சாலையை கடக்கையில், என்னை நானே 
சமாதானப்படுத்தி
சிரித்துக்கொண்டேன்..

---  x ---

எஷ்ட்ரா ஷ்பீடா  ஓட்ட சொல்ல,
யார்ரா இது எரும மாடு மாதிரி?..

"சோப்பு கலர்
சிக்னல் கண்ணுக்கு தெர்ல?" - நடூ ரோட்டுல
சிரிச்சுகினே போவுது பாரு 
சாவு கிராக்கி!

---  x ---

Wednesday, September 14, 2016

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம் - 25




நேற்று பெய்த மழையில் தொகை விரித்து ஆடியவள்,
இன்று வந்த மழையில் குடை பிடிக்கிறாள்..

குழப்பத்தில் மயில்! 

Monday, July 13, 2015

''மனித வணக்கம்'' - கமல்ஹாசன்

''மனித வணக்கம்'' 
- கமல்ஹாசன்

மனித வணக்கம்.

தாயே, என் தாயே!
நான்
உரித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின்
மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.



தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம்தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை.

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல ..
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை
காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.

மதமென்றும், குலமென்றும்
நீ துவைத்த துணிக் கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,
வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.

ஆம்,
நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

Saturday, May 2, 2015

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 23





'ஆவின்' பால் கிடைப்பதால்தான் 
அன்பு செலுத்துகிறோமோ 
ஆவின் பால்?

[கமல் படம் பார்த்துவிட்டு வாலி ஸ்டைலில் கவிதை..]

Friday, May 30, 2014

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 22

"ஆணா? பெண்ணா?"

"எந்த ஸ்கூல்?"

"எத்தனையாவது ரேங்க்?"

"இன்ஜினியரிங்கா? மெடிக்கலா?"

"அதுக்குள்ள வேலைக்கு போயிட்டானா?"

"நல்ல சம்பந்தம் வந்துருக்கு.. பேசாம கல்யாணத்த முடிச்சுட வேண்டியதுதான்.."

"பலே! பலே! அப்பா ஆகிட்ட! பொறுப்பு ஜாஸ்தி ஆகிடுச்சு!!"




"உடம்பு எப்படி இருக்கு?"

"Rice completeஆ விட்ருங்க.. சரிங்களா? "

":அடடா., போன மாசம் வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.. திடீர்னு இப்படி ஆகிடுச்சே!"

---------

கேள்விகளுக்குள் சிக்கித்தவிக்கும் வாழ்க்கை..

--------

Saturday, September 7, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 21

எல்லா அம்மாக்களுக்கும் 
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..

நேற்று உண்ட நிலவை 
இட்லியென்றொ, 
தச்சி மம்மு என்றோ, 
லாக்டோஜன் என்றோ,


உணரும் தருணம் 
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து 
குழந்தையும்..

அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..

Wednesday, September 4, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 20


சுடும் வெயிலை
சகித்துக்கொள்ளலாம் 

கொட்டும் மழையில் 
நனைந்தும் விடலாம்..

இந்த பாழாய்ப்போன 
தூரலைத்தான் 
என்ன செய்ய? தெரியவில்லை..

Sunday, September 1, 2013

புரிதல்

(படித்ததில் பிடித்தது)


பிறந்த பின்
ஆண்டுகள்
ஓடிய பின்னர்
புரிந்துகொண்டேன்
பிறந்தேன் என்பதை

நிகழ்தலில் இல்லை
நிகழ்வது என்பது
புரிதலின்போதே
நிகழ்தல் அறிந்தேன்

காதல் செய்ததோ
இருபது வயதில்
காதல் உணர்ந்ததோ
ஐம்பது வயதில்



Who I Am

வாழ்தலில் இல்லை
வாழ்க்கை என்பதும்
வாழ்தல் முடிந்த பின்
வாழ்க்கை உணர்தலும்
வாழ்க்கையின் முழுமை
என்பதை அறிந்தேன்

எனில்,
சாதல் அடைந்த பின்
சாதலே இன்றி
இருப்பதும் நிஜம் எனில்
இறந்திட மாட்டேன்!

- பா.கிருஷ்ணன்

Saturday, August 24, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 19

எழுதுகோலில் மசியில்லை
கொட்டிக் கிடக்கும் கவிதைகள்..

விசாரிக்க ஆளில்லை
விசித்து விசித்தழும்
வெள்ளருவி..
                                


விழுந்து புரளவும்
எவருமில்லை
பச்சை போர்த்திய
புல்வெளி..

இருப்பை உணர்த்த 
சுருங்கி விரிந்தாலும்,
நாட்காட்டியில் மட்டுமே 
பௌர்ணமியும் அமாவாசையும்..

கொள்ளை அழகோடு 
வயதுக்கு வந்தாலும் 
எவரும்   தொட மறுக்கும் 
பருவ மழை ..
                                    
சன்னலோர
இருக்கை கிடைத்தும்
நம் பயணமெல்லாம்
கண்களை மூடியபடியே..

Wednesday, July 24, 2013

Monday, January 28, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 17

"இரு இரு..", என்றது 
இலை..
"இதோ - இரண்டே நிமிடத்தில்
இடைஞ்சல் களைகிறேன்.."

"விடு விடு..", என்றது 
வானம்..
"விருட்டென்று கொஞ்சம் 
சிவந்து கொள்கிறேன்..."

"பொறு பொறு..",என்றது 
ஆறு..
"சற்றே பொறுத்திரு 
இசைந்து தவழ்கிறேன்.."

சிடு சிடு - த்தது  
சூரியன்...
"ஒரே நொடியில் 
மங்கி மிளிர்கிறேன்.."

அலைகள் இல்லாத 
கவலையில், காற்றை 
"கொடு.. கொடு" என்றது 
கடல்..

காற்று தந்த அலையை 
தன்னை 
"தொடு தொடு" என்றது 
கரை 

அலங்கார சடங்குகள் எதிலும் 
அசராமல், என்னை  
"எடு எடு" என்றது 
மலை..

.....





புகைப்படங்களில் அடைக்கப்படும் முன் 
இலைகளுக்கோ 
மலைகளுக்கோ 
நதிகளுக்கோ 
மேகங்களுக்கோ 

யாரேனும் 
புன்னகைக்க அவகாசம் கொடுத்தீர்களா?



Monday, January 14, 2013

ஹைக்கு - 2





அமெரிக்க மார்கழி 

ஜில்லேனக்காற்று 

இலையில்லா மரம்..

Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


Saturday, December 22, 2012

Tuesday, November 6, 2012

Tuesday, September 4, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 15







உன் பிள்ளை மண்ணை உண்டால் 
உடனே வாயை திறக்கச்சொல்..

வையகம் தெரியாவிடில்
ஐயமே இல்லை..
நீ யசோதை இல்லை!

Friday, August 3, 2012

பின்னோட்டம்


அப்பா சொன்ன பேச்சை 
கேட்டிருந்தால்?

பன்னிரண்டாம் வகுப்பில்
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால்?

அந்த விபத்தை எப்படியாவது
தவிர்த்திருந்தால்?

அவளை சந்திக்காமலே 
இருந்திருந்தால்?

சுயமாய் முன்பே 
சிந்தித்திருந்தால்?



தமிழை முறையே 
பயின்றிருந்தால்?

இப்படியாக
எண்ணியபடி தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்:-

பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் சொல் கேட்டு,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை தவிர்த்து,
விபத்தன்று வீட்டிலேயே முடங்கி,
தமிழை முழுதாய் பயின்று,
சுயமாய் முடிவெடுத்து,


பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமே என்று...

Thursday, July 5, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 12






கருப்பு HB பென்சில்  கொடுத்து 
வானவில் வரையச்சொன்னேன்,

மழையை வரைந்துவிட்டு
"பினிஷ்ட்" என்றது குழந்தை..

"வானவில் எங்கே?" என்றேன்
 
"மழை நிற்கும் வரை இரு
வானவில் வரும்.." என்றாள்! 


Tuesday, April 17, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 11




விடுமுறைக்கு இந்தியா சென்ற 
அமெரிக்க வாழ் இந்தியர்,
"இங்க இந்தியன் புட் எங்கே கிடைக்கும்?" என்றார்!