Friday, November 9, 2012

சொல்வனம் - ஆனந்தவிகடன் - நவம்பர் இதழ்


கடந்து போதல்

றங்கிக்கிடக்கிறது ஊர்
கள்வர் நடமாட்டமோ
காதலர் சந்திப்போ
ஓர் உயிரின் விடைபெறுதலோ
புதியதன் வருகையோ
நிகழ்வுகள் ஏதுமற்ற
இன்னுமோர் இரவோ...
அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது
ரயில்

 உறங்கும் ஊரை
லேசாகச் சிணுங்கி
ஒருக்களித்துப் படுக்கவைத்தபடி.

- எஸ்.வி.வேணுகோபாலன்

Tuesday, November 6, 2012