கண்டிப்பாக மசாலா படம்தான். நான்கு பாடல் நான்கு பைட் இருக்கும் என்று தெரிந்துதான் போனேன்...ஆனாலும் ...
லிங்குசாமி மீண்டும் 'ரன்' மாதிரி ஒரு படம் எடுக்க விரும்பியது
தவறில்லை . 'ரன்' மாதிரியே எடுத்ததுதான் தவறு. அண்ணன்-தம்பி. அண்ணி-தம்பி. தம்பி-காதலி. வில்லன்(கள்).
கதை:
'ப்ளாட்' நன்றாக இருந்தாலும் சுவாரசியம் ஊட்டும் தருணங்கள் இல்லை. 'மிஸ்டேக்கன் ஐடென்டிட்டி' - with a difference... இதை 5 நிமிட குறும்படமாக எடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். எதற்கு மூன்று மணி நேரம்?யோசித்துப்பார்த்தால் சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. மாதவன், ஆர்யாவிடம் லிங்குசாமி கதை சொல்லும்போது என்ன சொல்லியிருப்பார்? சத்தியமாக தெரியவில்லை.
மாதவன் - தமிழில் நடித்தால் மட்டமான படங்களில் (மன்மதன் அம்பு, ஆர்யா, ரெண்டு) மட்டுமே நடிப்பேன் என்று கங்கணம் கட்டி இருக்கிறாரா?. மணிரத்னம் படத்தில் மட்டும் நல்ல பாத்திரங்கள் நடிப்பேன் என்று வீம்பு பிடித்தால் ஞாயமா? அட நீங்க ஹிந்தி படத்துல மொக்கையா நடிச்சா கூட பரவால்ல. எங்களுக்கு தெரியாமலாது இருக்கும்ல?
ஆர்யா - இவரை படம் முழுவதும் அனைவரும், (சில சமயம் அவரே) சிங்கம், தங்கம், சூறாவளி என்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.. நடனம், நடிப்பு, சண்டை என்று ஒன்றுமே வரவில்லை. பாலாவிடம் பயின்ற பிறகும் இப்படி மொக்கை போட்டால் என்ன செய்வது?
தம்பி ராமையா ஏன் எல்லா படத்திலும் கான்ஸ்டபிள் பாத்திரத்தில் நடிக்கிறார்??
நாசர் - ஐய்யோ பாவம்.
சமீரா ரெட்டி, அமலா பால்... அட போங்க பாஸ்.
இவர்கள் அனைவருக்கும் மேலாக என்னை மிகவும் 'கவர்ந்த' பாத்திரம். 'அண்ணாச்சி'. உத்ரான்ச்சல் மாநிலத்தில் இருந்து வெள்ளை வெளேர் என்று குர்த்தா போட்ட ஒருவரை காண்பித்து - அண்ணாச்சி என்கிறார்கள்.
தூத்துக்குடியில் எல்லா ரவுடிகளும் அண்ணாச்சிகள் தானா? பிறந்தவுடன் அனைவரும் அவரை அண்ணாச்சி என்று அழைக்க ஆரம்பித்து விடுவார்களா? அண்ணாச்சிகளுக்கு பெயரே அண்ணாச்சிதானா?
இவரை ஒரு சேட் ஜியாக காண்பித்திருக்கலாமே? ஒரு 'சேட் ஜி' தூத்துக்குடியில் ரவுடி ஆகக்கூடாதா? தூத்துக்குடியில் பல 'சேட் ஜி'க்களே கருப்பாக இருக்கிறார்கள். அண்ணாச்சி பத்திரத்திற்கு ஒரு கப்பூர் மண்டையன். அவருக்கு பதில் நிஜமாகவே ஒரு அண்ணாச்சி பழத்தை திரையில் காண்பித்து 'அண்ணாச்சி அவன தூக்கணும் அண்ணாச்சி' என்று சக அல்லக்கைகள் பேசி இருந்தாலாவது நம்பும்படி இருந்திருக்கும்.
இப்படி nammaye அபத்தமாக பேச வைத்து விடுகிறார் லிங்கு.
இன்னும் முடி வெட்டாமல் குளிக்காமல் தமிழ் சினிமாவில் ரவுடிகள் ஏன் வருகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள் இவர்களெல்லாம்? அனைவரும் அண்ணாசியோடு சேர்ந்து பைல்ஸ் வந்தார்ப்போல் கத்துகிறார்கள். குமுறுகிறார்கள்.
"இனி என்னோட ஒவ்வொரு அடியும் வேற மாதிரி இருக்கும்.." - இப்படி இப்படி படம் நெடுக பேசுகிறார்களே தவிர ஒன்றும் செய்யவில்லை
இதற்க்கெல்லாம் மேலே அபத்தமாக நிறைய காட்ச்சிகள். ஆர்யாவை வில்லன் கும்பல் அடித்து நொறுக்கும் போது, மாதவன் கூண்டின் மீது ஏறி கஷ்டப்பட்டு வர வேண்டிய அவசியம் என்ன? கதவை திறந்து வந்திருக்கலாமே? கூடைக்குள் வெடிகுண்டு இருக்கிறதென்றால், கூடையை வெளிய எரிந்திருக்கலமே? அதை காரிற்குள் வைத்து விட்டு வில்லன்கள் ஓடி வர, கார் வெடிக்கிறது... போங்க டா டேய்!!
திரைக்கதை என்று டைட்டில் கார்டில் போட்டுக்கொள்கிறார் லிங்கு. தமிழ் நாட்டில் பச்சை குழந்தைக்கு தெரிந்த திரைக்கதை அபத்தம் இவருக்கு தெரிய வில்லை. முந்திய காட்சியில் நடந்த சம்பவத்தை, அடுத்த காட்சியில் இன்னொரு கதாபத்திரத்திடம் வரி வரியாக விவருப்பது ... - சாரி நீங்க வளரனும் லிங்கு!
இதெல்லாம் விடுங்க... சண்டை காட்சிகளில் வில்லன்/ஹீரோ முகங்களில் சிகப்பு விளக்கு போடுகிறார்கள். (அது வெளியே வெடிக்கும் வெடியின் ஒளி என்று சப்பைக்கட்டு கட்டினாலும் சகிக்கவில்லை.)
யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையாம். சொல்லித்தான் தெரிய வேண்டும். வசனங்கள் பெரிய மைனஸ்.
மொத்தத்தில் படம் எடுத்தவர், நடித்தவர், நடித்த கதாபாத்திரங்கள் -
அனைவரும் முட்டாள்கள்.. இவர்களை விட அதி முட்டாள்(கள்) - பார்த்த நான். பார்க்கப்போகும் நீங்கள்.
வேட்டை - மெகா சைஸ் ஓட்டை.
நான் சொல்லல :) இதான் அகலாது அணுகாது... :P
ReplyDeleteha ha :D
Delete