எல்லா அம்மாக்களுக்கும்
எட்டிவிடுகிறது நிலவு,
தன் குழந்தைக்கு உணவூட்ட..
நேற்று உண்ட நிலவை
இட்லியென்றொ,
தச்சி மம்மு என்றோ,
லாக்டோஜன் என்றோ,
உணரும் தருணம்
தொலைந்து விடுகிறது - நிலவோடு சேர்ந்து
குழந்தையும்..
அம்மாக்களுக்கு மட்டும்,
எப்போதும் நிலவு,
எட்டிவிடும் தூரத்தில்..
எட்டிவிடும் தூரத்தில்..