சுஜாதா
பிப்ரவரி 14ஐ உலகமே காதலர் தினமாகக் கொண்டாடும்போது, ஆஸ்திரேலியாவில் அதை நூலக தினமாகக் கொண்டாட விரும்புகிறார்கள். நூலக நேசர்கள் ஏறக்குறைய காதலர்கள் போலத்தான்... நூலகத்தைப் பார்த்துவிட்டால் சோறு, தண்ணீர் வேண்டாம்! இவர்கள், காதலர்கள் இரண்டு தரப்பினருக்கும் சேர்த்து பிப்ரவரி 14ஐ 'நூலகத்தில் காதல் செய்வோர்' தினமாகக் கருதலாம் என்று தோன்றுகிறது. 'உலகமே காதலரைக் காதலிக்கிறது' என்கிறார் ஷேக்ஸ்பியர். மற்ற வீட்டுக் காதலர்களையும் திரைப்படக் காதலர்களையும் நாம் நேசிக்கையில், அதே காதல் நம் வீட்டுக்குள் கால் வைத்துவிட்டால் விரட்டாத பெற்றோரே இல்லை. இதற்குக் காரணம், பிள்ளைகளின் மேல் அதிக எதிர்பார்ப்பும், அவரவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களும்தான் என்பது, யோசித்தால் புரியும்.
காதல் பற்றி என் நண்பர் ஒருவர் பி.ஹெச்டி. அளவுக்கு ஆராய்ச்சி செய்து, புத்தகமே எழுதியிருக்கிறார். 'ஆதலினால் காதல் செய்வீர்' என்று நான் ஒரு நாவலுக்குத் தலைப்புக் கொடுப்பதற்கு முன்பே, அதே தலைப்பில் புத்தகம் எழுதிவிட்டார். காதல் எப்படி நம் உலகத்துக்கு அவசியமானது, இனவிருத்திக்கும் முக்கியமாக இன வேறுபாட்டுக்கும் அவசியமானது என்பதை ஆராய்ந்து எழுதியிருந்தார். சிவப்பான பெண்கள் கறுப்பான ஆண்களை விரும்புவதும், கட்டுப்பாடு உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேற்று சாதியிலோ மதத்திலோ காதல் செய்வதையும் மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகக் குறிப்பிட்டு இருந்தார். இயற்கை மேம்பாட்டை, மாறுதலை நாடுவதன் அறிகுறி என்று அற்புதமாக எழுதியிருந்தார். அவரது மகள்தான் ஆராய்ச்சிக் குறிப்புகளைப் படி யெடுத்து, புத்தகமாக அச்சடிக்க ஃபாரம் ஃபாரமாக புரூஃப் திருத்திக் கொடுத்து வந்தாள்.
ஒரே மகள்! செந்தில், அச்சாபீஸில் எடுபிடி வேலை செய்து வந்த இளைஞன். காதலுக்குச் சாதி இல்லை. இப்போது பேராசிரியர், காதல் பற்றிப் புத்தகங்கள் எழுதுவதை நிறுத்திவிட்டார். சுய முன்னேற்றப் புத்தகங்கள் எழுதி வருகிறார். 'உன்னை நீ அறிந்துகொள்!', 'செயல்படு... சிறைப்படாதே!' போன்ற டைட்டில்களில் இந்தப் புத்தகங்கள் குறுகிய காலத்தில் நான்கைந்து பதிப்புகள் கண்டிருக்கின்றன.
என் அனுபவத்தில், இத்தனை வருஷங்களில் காதலுக்கு இரண்டு உதாரணங்கள் பார்த்திருக்கிறேன். என்னுடன் எம்.ஐ.டியில் படித்த சக மாணவன் அழகாக இருப்பான்; படிப்பு வராது. நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரன். பரீட்சையில் அநியாயத்துக்குக் காப்பி அடிப்பான். என்னுடன் பரீட்சை சமயத்தில் குரூப் ஸ்டடிக்கு வந்து முக்கியமான கேள்விகளுக்கு பிட் எழுதிக் கொள்வான். தனக்கு
மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணிபுரிந்தபோது, எனக்குக் கல்யாணமாகியிருக்கவில்லை. என்னுடன் டியூட்டியில், கம்யூனிகேஷன் ஆபீஸராக இருந்தவர் ஓர் ஆங்கிலோ இந்தியர். அவர் பெயர் ஹார்ட்லஸ். இருவரும் நைட் டியூட்டி பார்ப்போம். என்னைவிட வயதில் மூத்தவர். செம்பட்டைத் தலையும், பச்சைக் கண்களும், அழகான கையெழுத்துமாக, ராத்திரி டியூட்டியில் தூங்கவே மாட்டார். 'சின்னப் பையன், புதிதாகச் சேர்ந்திருக்கிறான்' என்று என் மேல் வாத்சல்யம் காட்டினார். தான் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்று ஒரு நாள் சொன்னார். அவர் காதலித்த பெண் திருமணம் வரை, கிட்டத்தட்ட சர்ச் வாசல் வரை வந்துவிட்டு, கடைசி நிமிஷத்தில் திடீர் என்று மனம் மாறி, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த ஒருவனைக் கல்யாணம் செய்துகொண்டு, அந்தத் தேசத்துக்குப் பறந்து போய்விட்டாளாம். அதனால், ஹார்ட்லஸ் கல்யாணமே செய்துகொள்ளவில்லை. அந்தப் பெண் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி, நாலைந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்டு, கணவனை இழந்து திரும்ப பல்லாவரம் வந்துவிட்டாள். ஹார்ட்லஸ் தன் ஐம்பத்து நாலாவது வயதில் அவளைக் கல்யாணம் செய்துகொண்டு, மற்றவனுக்கு அவள் பெற்ற பிள்ளைகளைத் தன் பிள்ளைகள் போலப் பாவித்து, அவர்களின் காலேஜ் அட்மிஷனுக்காக அலைந்துகொண்டு இருந்தார்.
காதலித்துவிட்டுக் காணாமல் போய்விடுபவர்களும் உண்டு; கடைசி வரையில் மறக்காமல் காத்திருப்பவர்களும் உண்டு!
* ஆனந்த விகடன் 13-02-08
|
Tuesday, February 14, 2012
காதலிலே ரெண்டு வகை! (சைவம், அசைவம் அல்ல!)
Labels:
anantha vikatan,
article,
Love,
sujatha,
velentines day
Wednesday, February 8, 2012
இப்படியும் சில மனிதர்கள்
பரத்:
ஏழாம் செமஸ்டர் விடுமுறைக்கு எனது மாமா(க்கள்)/சித்தி வீட்டிற்கு சென்றிருந்தேன். எனது தம்பி/தங்கைகளுக்கு மிட் டெர்ம் பரீட்சை நடப்பதால், பொழுது போகாமல் நான்கு நாட்களில் கிளம்ப முடிவு செய்தேன். வைகை. தட்க்கலில் பயணச்சீட்டு வாங்கி நாளை புறப்பட ஆயத்தமாகிக்கொண்டிருக்கிரேன்.
நாளை:
"பயணிகள்-கவனத்திற்கு-வண்டி-எண் -
ஒன்று-இரண்டு-ஆறு-மூன்று-ஐந்து-இரண்டாம்-பிளாட்பாரத்தி ல்-இருந்து-இன்னும்-சிறிது-நே ரத்தில்-புறப்பட-இருக்கிறது"
ஒலி பெருக்கிப்பெண்ணின் வெட்டிய தமிழ், மனிதன் எவ்வளவு இயல்பாக இயந்திரத்தனத்திர்க்கு பழகிவிட்டான் என்று நினைவுப்படுத்தியது.
ஒரு நாள் பொழுதை கழிக்க, ஒரு லிம்கா - 500 எம்.எல்., புதிதாய் வாங்கிய புத்தகம் - 'கடவுள்' - சுஜாதா, ஐ-பாட், மற்றும் இளையராஜாவை நம்பி இருந்தேன்.
S3 கோச்சில் நான் கொண்டு வந்திருந்த பெரிய்ய்ய பையை ["எதுக்கும் இருக்கட்டும், மழை கிழை வந்தா மாத்து துணி வேண்டாமா?" என்று அம்மா வைத்துவிட்ட துணி உபயோகப்படாமல் இடத்தை அடித்துக்கொண்டிருந்தது] நுழைக்க சிரமமாக இருந்தது. ஒருவழியாக 43 வந்தடைந்தேன். ஜன்னல் சீட். புழுக்கம் கம்மி. இயற்பியல் விதிகளுக்கு நன்றி.
மணி: 12:45pm.. ரயில் கிளம்பியது.
என் ஜன்னலோர பிரபஞ்சம் என்னை சூழ்ந்துகொண்டது.
ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்
Bloody hell! What am I supposed to do in THIS compartment? இவனுங்கள நம்பவே கூடாது. ஏ.சி ல புக் பண்ண சொன்னா,செகண்ட் கிளாஸ்ல புக் பண்ணிருக்கான். பார்வதி, உனக்கு ஏன் சிக்குன்குனியா வர வேண்டும்? நான் எப்படி அர்ச்சனாவை [வயது - ஒன்று] ஒரு நாள் பூரா சமாளிக்க போகிறேன்? இந்த க்ளையன்ட் மதுரைல ஏன் இருக்கான்? என் கம்பெனி ஆட்கள் என்னை ஏன் அனுப்பனும்? இந்நேரம் பாத்து உன் அம்மா அப்பா ஏன் யு.எஸ்.ஸில் இருக்க வேண்டும்? ச்ச!
லேப்டாப் - இருக்கிறது
டிக்கட் - இருக்கிறது
செல் போன் - இருக்கிறது
லுக்கேஜ் - இருக்கிறது
டாக்குமெண்ட்ஸ் - இருக்கிறது
குழந்தை - இருக்கிறது
ஒரே ஒரு பகல். என் இனிய அர்ச்சனா, உறங்கிவிடு.
என் இருக்கையில் சென்று அமர்ந்தேன்.ஜன்னலோரம். எதிரே ஒரு வாலிபன் எதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். தமிழ் புத்தகம். அட!
அர்ச்சனாவை அவளுக்கென்று வாங்கிய இருக்கையில் [வேறு வழி?], அவள் அம்மாவின் சில்க் புடவை விரித்து படுக்கச்செய்தேன். ட்ரெயின் புறப்பட்டு விட்டது. இணையத்தில் என்னை இணைத்துக்கொண்டேன்.
பரத்:
மிக சுவாரஸ்யமாய் ஆரம்பிக்கிறது - கடவுள். சற்று நிமிர்ந்து என் சக பயணிகளை ஒரு நோட்டமிட்டேன். எனக்கெதிரே, லேப்டாப்பில் உலகம் தேடும் மனிதர். அருகில் அவர் குழந்தை [என்று நினைக்கிறேன்]. எனதருகில் ஒரு இளைஞர் தூக்கத்தின் விளிம்பில் அமர்ந்திருந்தார். பக்கவாட்டு இருக்கையில் குறுக்காக ஒரு இளம் ஜோடி. அப்போதுதான் திருமணம் ஆகி இருக்க வேண்டும். காதல் திருமணம். பாசாங்குகள் இல்லை. கொஞ்சம் எட்டிப்பர்தேன். பல முகங்கள். சில பின்னல்கள். சில சொட்டைகள். அதில் அற்ப மயிர்கள்.
காதில் "தில்லுபரு ஜானே.." என்று மனோ காதலித்துகொண்டிருந்தார். மீண்டும் 'கடவுளில்' மூழ்கினேன்.
அந்த ஜோடி:
[ நீண்ட மௌனம்..]
"சுரேஷ், என்னை நீ ஒழுங்கா பாத்துப்பேல்ல?"
"ம்ம்ம்ம்.. வேற வழி?"
"விளையாடதடா..எனக்கென்னாவோ பயம்மா இருக்கு. என்னதான் அப்பா அம்மா ஒத்துக்கிட்டாலும்..."
புன்னகைத்தான்.
தோளில் சாய்ந்துகொண்டாள். கண்களினோரம், வரட்டுமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்த கண்ணீர், "ரமா.. ஐ லவ் யூ.. உன்ன விட்டு எங்க போயிட போறேன்?" என்று சுரேஷ் சொன்னவுடன், வந்துவிட்டது...
மீண்டும் மௌனாலோகம்..
அருகில் தூக்கதிதின் விளிம்பில் இருந்த இளைஞர்:
தூங்கிவிட்டார். அவ்வப்போது பரத்தின் மீது சரிந்து கொண்டு..
ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்.
ஐ டோன்ட் வான்ட் டு நோட்டிஸ் தீஸ்...பட்... கண்ணு முன்னால நடக்குது..தட் பெல்லோ இஸ் ஸ்லீப்பிங் ஆன் திஸ் கைஸ் ஷோல்டர்... மெட்ராஸ் ஜனங்களுக்கு மானர்ஸ் சொல்லி தரணுமா? இப்படி இருந்தா எப்டி உருப்படுவோம்? பர்சனல் ஸ்பேஸ் இலாம எப்படி பப்ளிக்ல இருக்க முடியும்? இட்ஸ் அன் ஈசி! சொல்லி விடலாமா? என்னால் சொல்லாமல் இருக்க முடியுமா?
"சார்!"
"சார்..எக்ஸ்க்யுஸ் மீ!"
அவன் கண் முன்னே கை அசைத்து அழைத்தேன்.
"சாரி சார்.. பாட்டு கேட்டுட்டு இருந்தேன்.நீங்க கூப்பிட்டது கேக்கல." என்றான்.
"இட்ஸ் ஓகே... அது வந்து.."
"எஸ்.. சொல்லுங்க.."
"உங்க பக்கத்துல இருக்கறவர்..உங்க மேல வந்து வந்து விழறார். நீங்க சொல்லலாமே. இட்ஸ் மேக்கிங் மீ அன் ஈசி.."
"என்ன சார் நீங்க.. எதோ அசதியா துங்கறார். பாவம் தூங்கட்டுமே"
"இல்லை சார்.. அவன் உங்க மேல மேல வந்து விழறான். அவன் பாக்கவும் அவ்ளோ சரியான ஆசாமியா தெரியலை. நீங்க அவன் விழ விழ தள்ளி விட்டுட்டு இருக்கீங்க.. இந்த காலத்து ஜனங்கள நம்ப முடியாது சார்... ஹி இஸ் டிஸ்டர்பிங் யூ. ரைட்?"
"நோ!"
"சார்.நீங்க இவன மாதிரி ஆட்களை ஒன்னுமே பண்ணாம விடரதுனாலதான் இந்தியா இன்னும் முன்னேறாம இருக்கு. தவறுகள் நடக்குது. நாம இவனை சகிச்சுட்டே இருந்தோம்னா, இது மாதிரி உதவாக்கரைகள் அதிகரிச்சுட்டே இருப்பாங்க! தே ஆர் ஸ்கம்!"
பரத்:
"சார். என்ன இப்படி பேசறிங்க?! அவர் உங்களுக்கு என்ன பண்ணார்? சாயறது என் மேல. நானே ஒன்னும் சொல்லல. நீங்க ஏன் உணர்ச்சிவச படறிங்க? எனக்கு அவரோட அசதி பெரிசா தெரியது. உங்களுக்கு ஏன் அது தெரியலை? விடுங்க சார் பாவம்"
பக்கத்து இருக்கை நண்பர் மீண்டும் பரத்தின் மேல் விழுந்தார். இந்த முறை அவன் ஒதுக்கி விட வில்லை.
ஸ்ரீநிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:
என்னடா இது. ச்ச! இட்ஸ் எம்பாரசிங்! இவனிடத்தில் நாற்றம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன? அவன் எக்கேடும் கேட்டு போகட்டும். வை டூ ஐ பாதர்.காஷ்! ஐ நீட் எ ஸ்மோக் டெஸ்பரேட்லி.
விருட்டென்று எழுந்து கதவோரம் சென்று தனது மால்போரோவை [இறக்குமதி] நெஞ்சில் பரவ விட்டான். அர்ச்சனா தனியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.
அந்த ஜோடி:
"ரமா நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா?"
"எவ்வளவு?"
அவள் காதில் ஏதோ குசுகுசுத்தான். வெட்கி, அவன் கைகளை கவ்விக்கொண்டாள். இன்னும் நெருக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்.
பக்கத்து இருக்கை இளைஞர்:
தன்னால் இருவர் அடித்துகொள்கிறார்கள் என்று தெரியாமல் பரத்தின் தோள்களில் உறங்கிக்கொண்டிருந்தார்.
பரத்:
மனுஷங்க ஏன் இப்படி இருக்காங்க? ஒருவன் பார்க்க நன்றாக இல்லை என்றால், அவனை உடனே ஏன் எடை போடுகிறார்கள்? அவனுக்கும் ஆசைகள், உணர்வு, குடும்பம், வேலை, கடன் எல்லாம் இருக்கத்தானே செய்கிறது? இவர்களுக்கு தெரிந்து இப்படி நடக்கிறார்களா இல்லை இவர்கள் இருப்பிலேயே ஏதும் கோளாறு இருக்கிறதா? ஐ.டி ஜனங்கள் இப்படித்தான் இருப்பார்களோ?
வெளியே புயல் அடிக்கும்போது கான்க்ரீட் வீட்டில் இருப்பவனுக்கு கூரைகள் பிய்த்து எறியப்படுவது எப்படித்தெரியும்? எப்படி புரிய வைப்பேன் நான்? ஒரு வேளை என் மீது தான் கோளாறா? மனுஷ.... 'க்ரீஈஈஈச்'...
இவனது எண்ண ஓட்டத்திற்கும் சேர்த்து பிரேக் போட்டது ரயில்.
பட்டுச்சேலை, இருக்கையின் வள வளப்பில் வழுக்கி, அர்ச்சனா கீழே விழுந்... அதற்குள் பரத் அவளை பிடித்துவிட்டான்.
கண் விழித்த குழந்தை, "ஓஒ..ஓஒ.." என்று அழத்துவங்கியது.
ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:
அர்ச்சனாவா அது? என்ன ஆனது? இருக்கைக்கு விரைந்தான். பரத், அழும் குழந்தையை ஏந்தியிருந்தான்.
"சேலை வழுக்கிடுச்சு சார். விழறதுக்குள்ள புடிச்சுட்டேன். ஆனா அழ ஆரம்பிச்சுட்டான்."
"ஆரம்பிச்சுட்டா", என்று சரி செய்தேன்.
"ஓ.." என்று கொஞ்சம் வழிந்தான்.
என்னடா இது எழவாப்போச்சு. இவள் அழுகையை எப்படி சரி செய்வேன்?
"ஓஓ...ஊஉ...ம்ம்மம்பா...." என்று அர்ச்சனா அலறினாள்.
என்ன செய்ய வேண்டும் நான்? அழுகையை எப்படி நிறுத்த வேண்டும்? பார்வதீ... எவ்வளவு நாளா வேண்டுதல் இதுக்கு? டாம்! இந்த கம்பார்ட்மென்ட்டில் இருக்கும் அனைவரும் என்னையே பார்க்கிறார்கள். தி வொர்ஸ்ட் டே ஆப் மை லைப்! அர்ச்சனா அழுவதை நிறுத்து.
என்னவோ செய்தான் ஸ்ரீ. குரங்கு மாதிரி முகம் வைத்து காண்பித்தான். வினோதமாக சத்தம் செய்தான். அர்ச்சனா எதற்கும் மடியவில்லை.
"எக்ஸ்க்யூஸ் மீ.. மிஸ்டர்.."
"பரத்"
"பரத், இந்த பையில் ஒரு பால் புட்டி இருக்கும்.. எடுத்துத் தருவீர்களா?"
எடுத்துத்தந்தான்.
ரயில் மீண்டும் கிழம்பியது.
பரத்:
"சார்.. அவசரப்படாதிங்க. அம்மாக்களைத்தவிர நமக்கெல்லாம் கொஞ்சம் கஷ்டமான காரியம் தான்." என்று புன்னகைத்தேன்.
நான் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை.
அப்போது திடீரென்று ஒரு குரல்..
என்று கணீர் குரலில் பாட்டு கேட்டது. என்னவென்று எட்டிப்பார்த்தேன். கண் பார்வை இல்லாத ஒருவர், கையில் ஜல்..ஜல்.. என்று தான் இதுவரை சேகரித்த சில்லறைகளை தெரிவித்துக்கொண்டு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
என்று அவர் பாடப்பாட, அவரது குரல், என்னை ஏதோ செய்தது..திடீரெண்டு என்னைச்சுற்றி எல்லாம் இருண்டது. கண் பார்வை மட்டும் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம்? நிறம் - தெரியாது. உருவம் - தெரியாது.. தெரிந்த நிறம் - கருமை..மற்றனைத்தும் - வெறுமை.
நான் என் கண்களை மூடினேன். என் முகத்தில் அறைந்த காற்றை கண் பார்வை இல்லாதவர் எப்படி வர்ணிப்பார்? பார்வை இருக்கும் நமக்கே அதை வர்ணிக்கத் தெரியாதே! அழகு? சூரியன்? - தெரியாது. எழுத்துகள்? தெரியாது. ஆண் பெண் வித்தியாசம்? - தெரியாது. அடுத்த அடி எடுத்து வைப்பது பள்ளமா மேடா? தெரியாது. தன் முகம் எப்படி இருக்கும்? தெரியாது? என்ன ஆடை அணிந்து கொண்டிருக்கிறோம்? தெரியாது.
எனக்கு அடிவயிற்றில் சோகம் கவ்வியது. ஒரு வேளை எனக்கு எதிரே அமர்ந்திருந்த மனிதருக்கு கண் பார்வை இல்லாமல் இருந்திருந்தால் எங்களுக்குள் நடந்த வாக்குவாதங்கள் இருந்திருக்காது இல்லை?
ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்::
என்ன செய்ய வேண்டும்? அழுகையை நிறுத்து அர்ச்சனா! நீ வளர்ந்த பிறகு உனக்கு நிறைய பாக்கெட் மணி தருகிறேன். இப்போது தயவுசெய்து நிறுத்து.
என்ற கணீர் குரலில், அர்ச்சனா திடுக்கிட்டாள்.' என்னதிது? யார் அது? ' என்று திரும்பினேன்.
'ஓ! கடவுளே. இந்தியாவில் இன்னும் ஏன் இவர்கள் இருக்கிறார்கள்? அரசாங்கம் எதாவது செய்யலாமே! நாம் எப்படி முன்னேறுவது? '
என்று நினைத்துகொண்டிருந்த வேளையில் அர்ச்சனா, அழுகையை திடீரென்று நிறுத்தினாள். இன்னும் கண்ணீர் ததும்பிய கண்கள். ஆனால் கண்கள் விரிய எதையோ கவனிக்க தொடங்கினாள். அந்த குரல் அவளது கவனத்தை திசை திருப்புகிறது. அடடா! அவன் பாடுவது இவளது அழுகையை நிறுத்துமோ? பார்வதீ.. நீ இவளை தணிக்க பாடுவாயா என்ன?
அவள் அவனையே உற்று பார்த்துக்கொண்டிருக்கிறாள். இவனை வைத்தே இவளை சமாளித்துவிட வேண்டும்.'
அவள் பிஞ்சுக்கைகளை தனது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, "அதோ பாரு.. பூ...பூச்சாண்டி மாமா! அழுத புடிச்சு குடுத்துடுவேன். பாரு உன்னை பிடிக்கத்தான் வர்றார். பூ!"
அர்ச்சனா, பாடும் அவரை ஒரு வித வசீகரத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். இப்போது அழுகையை முழுதாய் நிறுத்திவிட்டாள். அப்போது அவர் காலில் ஏதோ பட்டு, கொஞ்சம் தடுக்கினார்.
"கே..ங்..கூ..கி.." அர்ச்சனா சிரித்தாள்.
'அட! சிரிக்கிறாளே! அப்பாடா!'
"ஹாய்..பூச்சாண்டி மாமா விழுந்துட்டாரு..பூச்சாண்டி மாமா..ஹாய்.. ஜாலீ.." என்று தனது கைகளைத்தட்டினான். அர்ச்சனா மேலும் சிரித்தாள். அவர் மறுபடி கொஞ்சம் தடுமாற, ஸ்ரீ, மேலும் அர்ச்சனாவை குதூகலித்தான்.
பரத்:
'ஐய்யோ! இது என்ன கொடுமை!?.. எவ்வளவு தவறான வழிகாட்டியை இவள் தந்தையாக பெற்றுரிக்கிறாள் ? நினைக்க நினைக்க பதபதைப்பாக இருக்கிறது. நாளைய தலைமுறைக்கு இவரைப்போல எத்தனை தவறான தந்தைகள்? எத்தனை தவறான தாய்மார்கள்? ஒரு தலைமுறையே இப்படி பார்வையற்றுப் போனால் என்ன ஆவது?
பார்வை இழந்தது அவர் குற்றமா?
ஏன் சிலருக்கு மற்றவர்கள் படும் அவலங்கள் புரிய மாட்டேன் என்கிறது? கொஞ்சமே கொஞ்சூண்டு பணத்தில் இவ்வளவு அலட்சியத்தை இலவசமாக பெறுகிறார்களா ? அவருக்கு என்ன தெரியும்? தெரிந்ததெல்லாம் ரயிலின் இரைச்சல், இரண்டு அல்லது மூன்று பாடல்கள், 'சில்லறை இல்லை' குரல்கள், சில்லறை சத்தம். அவ்வளவு தான் அவரது உலகம்.
அவர் கடவுள் - இனிதாய் பேசும் யாரும். நண்பர்கள் - கைகளும், கால்களும்... மனிதர்கள் - அவர்களது குரல்கள்.. எல்லாமே பாதி பாதியாக இருக்கும் அவரை ஏன் இப்படி கேலி செய்து அவர் குழந்தையை சிரிக்க வைக்க வேண்டும்? இவ்வாறான செயல்கள் அந்த
குழந்தைக்கு என்ன அறிவுறுத்தும்? என்ன பண்பு கொடுக்கும்?
யோசித்துக்கொண்டிருக்கையில் அவர் எங்கள் அருகே வந்துவிட்டார். என்னால் இயன்றதை குடுத்தேன். பார்வை அற்றவர்களின் கண்களை பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததில்லை என்றால், ஒருமுறை பாருங்கள். அது உங்களில் ஏற்ப்படுத்தும் அதிர்வுகளை சொல்ல சொற்களும் சொர்ப்பம்தான்.
என் எதிர் இருக்கைக்காரர் இன்னும் அர்ச்சனாவை குதூகலப்படுத்திக்கொண்டிருக்கி றார்.
எனக்கு உலகின் மேல் வெறுப்பு வந்தது. மனுஷனை மனுஷனா பாக்க நமக்கு எப்போ தெரியாம போனது? ஏன் இவரைப்போன்றவர்கள் பச்சாதாபத்தை இழக்கிறார்கள்? காரணம்தான் என்ன? சுயநலமா? வளர்ப்பா? attitude? என்ன காரணம்?
அந்த ஜோடி:
"சுரேஷ். என்கிட்டே உனக்கு புடிச்சது என்ன?"
"எல்லாமே"
"எல்லாத்துலயும் ரொம்ப புடிச்சது எது?"
"உன் கண்ணு.. அதை பாத்துட்டே செத்துடலாம் ரமா!"
மீண்டும் எங்கேயோ வெறித்துப்பார்த்து காதலிக்க ஆரம்பித்தார்கள்.
பக்கத்து இருக்கை இளைஞர்:
...கொர்ர்...கொர்ர்...
ஸ்ரீனிவாஸ் @ ஸ்ரீனிவாசன்:
அப்பாடா.. இவள் சிரித்து விட்டாள். படுக்க வைத்தால் கொஞ்ச நேரத்தில் தூங்கி விடுவாள். உறங்க வைத்து விட்டு டாக்குமண்டேஷனை முடிக்க வேண்டும். பி.எல். கத்துவான்!
பரத்:
மனிதன் பரிணாம வளர்ச்சியில் மீண்டும் மிருகமாகிறானா?
எனக்கு இந்த அக்கறை அற்ற சமுதாயத்தை பார்க்க விருப்பமில்லை. புத்தகத்தை மூடி வைத்தேன்.
இளையராஜா "அன்பிலாதவரைக்கண்டால், அம்ம! நாம் அஞ்சும் ஆரே!" என்று என் காதில் கசிந்து கொண்டிருந்தார். எனக்குள் சிரித்துக்கொண்டேன். உலகத்தோடும், பக்கத்துக்கு இருக்கை நண்பரோடும், உறங்கச்சென்றேன். பார்வையற்ற நண்பரின் முகம் அவ்வப்போது வந்து போனது.. ரயிலின் 'தடக்..தடக்..'கில் உறங்கிவிட்டேன்.
இரவு:
மணி: 1:20am
மதுரை கிழக்கு ரயில் நிலையம்:
மாரி: டேய் சிலுவை! இன்னிக்கு கலெக்சன் எப்புடி?
சிலுவை: அத்த ஏம்ப்பா கேக்கற! படா பேஜாரா போச்சு! காட்டு கத்து கத்தி பாடினாலும் சில்லறை இல்லைங்கறான்! எனக்கு இந்த குருட்டு வேஷம் போதுமப்பா.. நாளைலேருந்து நான் நொண்டியா போறேன். என்ன சொல்ற?
=====================
இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை சுமந்து உலகம் இன்னும் சுழலத்தான் செய்கிறது.
=====================
Dhanush's Sachin Anthem - My thoughts / Review
After "Kolaveri Di", a song about 'Sachin'.For a brilliant idea it is, could it even go wrong? Well, sadly, it did!
It seems like a great idea to combine the two elements that India loves so much -- Sachin and Kolaveri -- but Dhanush and Anirudh have slipped big time here.
The song and the video are poorly crafted, edited and does not give us the josh which just a thought about Sachin can ooze in our hearts. Its not patriotic and its not even singing about Sachin. The lyrics reads like a half baked rambling one might write in an unprepared engineering examination.
The video montage showing Sachings photographs is pathetic. A classic straight drive against Lee, the hook shot againt England in 2003, the shot down the third man against Akthar, Sachin lifting the world cup - few of many - during the interludes 'hittu mama.. six-u mama..' would have done wonders to the video!
Who wants to see Dhanush and Anirudh - who looks like minuscule version of Ishanth Sharma ready to rest in peace immediately after the shoot - in a song about Sachin? And was Anushka even there?
Plus the timing of this song is ridiculous! When India is struggling with its performance overseas and people are losing interest in Sachin's 100th hundred, the energy level with which we face this song is too low!
With all the hype and expectations after Kolaveri, the makers should have put in more effort and care. Last few seconds when the cast cries 'Sachin.. sachin' in pouring rain is the only good thing about the song.
So what should've been in the lines of 'when unstoppable force meets an immovable object', just passes a muster.
And of course it trends in twitter! People are going to tell how much they dislike this one!
Few things just happen. They are not to be re-created!

Wednesday, February 1, 2012
Kaathalil Sothappuvathu Eppadi - Music Review
Why do I want to review Kathalil Sothappuvathu Eppadi (KSY) music?
Because its Balaji Mohan's debut movie. He has "kanavu keerthanai", "Mittai veedu", "Kaathalil sothappuvathu eppadi", "Puthayal" to boast under his belt and I am his youtube follower right from his olden days!
"Mittai veedu" is probably one of the best feel good Tamil venture (including all the mainstream movies of the past 75 years put together!). When I came to know that he is making KSY into a full length feature film, I was actually glad!
I thought he would retain the cast.. but to my disappointment, he could not. And the trailers were not that great to be true!
Now the songs are out. What else could a Balaji Mohan fan can do?
Aanandha Jaladhosham
Catches your attention instantly. Vocal orchestration is something which is not yet explored entirely in Tamil cinema except few rare examples like Rasathee from Thiruda Thiruda, Ethileyum vallavanda [watch video from 2:30, Nan poranthu vanthathu from Mayabajar 1995..to my astonishment, I could come up with only one such experiment by Ilayaraja! - these songs are not just rich in vocal harmonies.. but they have no instruments to back up the vocals. Technically they are called "A Capella" composition.
Though this song is no 'A Capella', but its something like - Please sir - from Boys. Worthy vocals supported by occasional base.
The lyrics are fetchy and lighthearted
"கிராபிக்சில் கனவுகளோடு - லவ்..லவ்..
A foot tapper.
Azhaipaya Azhaipaya/Azhaippaya Azhaippaya (reprise)
A song which is sure to bring smiles to millions of boys and girls across Tamil Nadu. A song to cherish the moment, which probably is the dumbest one in their entire life, when a girl/guy waits for a call/missed call respectively :)
The rush a boy/girl feels during that moment is abundantly stupid enough, to cherish! :)
Has this song done justice to those few adorable minutes? I would say no. It has tried its level best. An almost perfect tempo,mood and instrumentation fails to make an impression due to a mediocre lyrics.
And I am still having difficulty to believe its Harini who sang the song.
The violin interlude between pallavi and charanam proves that Thaman has his roots correct!
Parvathi Parvathi
Yet another sophistaicated-love's song. When Tamil cinema is crying out loud with love failure songs - Kathal en kathal, Yamma yamma , this tries something in the lines of Kolaveri di.
This song for the major part reminds me of Vishwanathan Velai vendum.
Siddarth has messed up the song which is only made worse by Madhan Karky's wannabe-funny lyrics!
Thavarugal Unargirom
Is it just me or Thaman's voice really sounds like A.R.Rahman's? When he sings - "Thavarugal" - with a "la" between ல and ள, dont you hear Rahman? :)

தூக்கத்தில் பாக் க்ரவுண்ட் மியூசிக் - லவ்..லவ்..
தெருவோரம் நின்னாலும் பாரின் சாங் போல தோணும்..
எல்லோரும் ஹீரோ ஆகும் லவ்... ஹீரோயின் தேடிப்போகும் லவ்..."
A foot tapper.
Azhaipaya Azhaipaya/Azhaippaya Azhaippaya (reprise)
A song which is sure to bring smiles to millions of boys and girls across Tamil Nadu. A song to cherish the moment, which probably is the dumbest one in their entire life, when a girl/guy waits for a call/missed call respectively :)
The rush a boy/girl feels during that moment is abundantly stupid enough, to cherish! :)
Has this song done justice to those few adorable minutes? I would say no. It has tried its level best. An almost perfect tempo,mood and instrumentation fails to make an impression due to a mediocre lyrics.
And I am still having difficulty to believe its Harini who sang the song.
The violin interlude between pallavi and charanam proves that Thaman has his roots correct!
Parvathi Parvathi
Yet another sophistaicated-love's song. When Tamil cinema is crying out loud with love failure songs - Kathal en kathal, Yamma yamma , this tries something in the lines of Kolaveri di.
This song for the major part reminds me of Vishwanathan Velai vendum.
Siddarth has messed up the song which is only made worse by Madhan Karky's wannabe-funny lyrics!
Thavarugal Unargirom
Is it just me or Thaman's voice really sounds like A.R.Rahman's? When he sings - "Thavarugal" - with a "la" between ல and ள, dont you hear Rahman? :)
A break-up and re-union song which ends before we even realize it has started. A fast-techno-melody. Should I put it that way? A good listen.
@Balaji M - Though I have mixed feelings about the movie/songs, I haven't lost hope in you :)
@Thaman: Your songs are really short and that could become a trend in Tamil Cinema! Thanks for that!
Rating: 2.75/5
Monday, January 30, 2012
Ilayaraja is back!! 'Dhoni' Music review!
Ilayaraja is back with his old ways! He has recorded the songs and BGM live for Prakash raj's directorial venture - Dhoni. The trailer looked melodramatic but the BGM was quite impressive from the Zen of music, Ilayaraja. It would be untrue if I said I was eagerly expecting a brilliant Ilayraja album. I know the golden era is over. But even now I never fail to listen to his albums at least once just not to miss few gems which only he can give [like Maa ganga, Om Shivo om - Naan Kadavul, Kuthikkira Kuthirai - Azhagarsaamiyin kuthirai]. I stumbled upon this post today in facebook and learnt that Dhoni songs were released. And like what all staunch Ilayaraja fans do, I listen to the songs... and rest was just magical...
Before going to the review, I should tell from where I got the above video. I got the above video from KuralTV website :)
Chinna kanniley is what Raja would have conjured up for director Faazil – the strangely Christian sounding tune, kids’ chorus, all add up to a simple, highly appealing song; Shreya Ghoshal is in fabulous form here, but Naresh Iyer sounds odd and vastly unlike himself, for some inexplicable reason. If thats what he calls voice modulation, he should listen to the very next song in the album - Vaangum panathukkum - sung by none other than SPB.
Na.Muthukumar’s fanciful lyrics around middle-class living, in Vaangum panathukkum, is accentuated by SPB's singing and Raja’s wonderful orchestration that is surprisingly free from his standard, modern accompaniments! SPB has played round in this song with full freedom like how a new wife would cook.. even though it tastes ridiculous, we are just fine with that. IR should've felt the same when SPB sang to his tune after a while!
Thaavi thaavi and Vilayaattaa are instantly reminiscent of Raja’s golden age – incredibly beautiful music for heartfelt tunes and surprisingly synth-free, again.
Raja sings like only he can in Thaavi thaavi, fully expressing the song’s meaning in his age-withered voice – the violin orchestra and the overall sound is absolutely mesmerising! Hariharan’s Vilayatta is equally beautiful – a slow, haunting tune, again propped by highly imaginative violin usage! It’s other version by Shreya Ghoshal is even better!
After what felt like eons, here’s an Ilayaraja soundtrack that brings back his glory days, sans synth and with superb orchestration that the man is known for! It’s amazing to listen to an Ilayaraja soundtrack so clean and earnest in its overall appeal, after such a long time, probably after Pithamagan!
Listen to all the songs here - http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003314
Friday, January 27, 2012
Happy new year 2012
As I write this, India is mukking in Aus. 11 paeru. Moochu thenara thenara adikkaranunga. Mokka start to 2012. Mokka ending also predicted by Mayans. And the Gods are probably talking about it.
Shiva: Dei Vishnu
Vishnu: Yes mama..wassup?
Shiva: I am only destroyer no?
Vishnu: Yes mama
Shiva: Then why you need Kalki avatharam? Sit simply.
Vishnu: 10 is very round number da. They took many movies too with that name. So I will wonly take off da. Not you. People will get confused if you go now! They will even be dissapointed to see you!
Shiva : Whats with the 10?
Vishnu : Im teliing you no? It looks good. See, 5 pandavas. 100 gauravas. 10 avatars. If you think about it, Indra is having 4 heads. Which feels incomplete. Even in Ramayan, I told that Valmiki to write it as 15 years. He only wrote it as 14. Many people asking me why 14 years you go to forest? If it were 15, no question. Even for Ravanan, 10 heads. No one questions why?! Got it?
Shiva: Ok po, when you are taking da?
Vishnu: This year only, I think... at least thats what Mayans told me!
Shiva: What?? This year-a? Have you taken birth and all?
Vishnu: Yes da
Shiva: Adapaavi. Who?
Vishnu: Sachin da. Even in his name I have placed 'ten'. Sachin Tendulkar. 10 in english. Dul is blast in Tamil. Kar is do in Hindi. Even his jersy number is 10. When he changed his number to 99, his form dropped! Why? Because it wasn't round! People also know. They call me God down there.
Shiva: Semma. Destroy off today then. Very tiring, this job.
Vishnu: Pls machi. Innum orey oru century adichuttu... it will be 100, 100s. What a feat!
Shiva: Aiyo, bleddy fellow, what is it with you and round numbers? I give you till end of year ok? If not I will destroy off.
Vishnu: Nanbaen da!
Ok mama now tune change-u.. ready? 1...2...3....4...
2011 was a good year for me, apart from me going to the verge of getting fired from the previous company . Few days back, I spoke to Madhan about what happened to us in 2011. I extended that thought for the past 10 years which is and will be the most crucial years in my life. 14-24. I've moved on from being a boy struggling to cope up with a breaking voice to a young man who trims his beard twice, just to be comfortable looking at himself in the mirror. I have grown, reading books, watching movies/cricket and relishing my food...
The more I think about it, the more I avoid writing about it.. at least in the blog. Those things can be said and done later. But what to write about 2011? Let me play safe here. Let me put down few things which comes to my mind when I think about 2011.
* Gautham Menon released Nadunisi Naaigal without any BGM. Also without any story, screenplay and direction. As I told you, I have grown to like movies like never before. It would be dumb if I say I get sad these days after I see a good movie.. I am sad because the number of new good movies that I can see is now minus one! So after Nadunisi naaigal, I was very happy!
* Animal Planet acquired 50% stake in Kural TV. TR released the Afro music that has since been scientifically proven to turn on a specific species in female hippopotamus.
* India won the cricket world cup after 28 years. Indians were overjoyed that there will be no more Hindi interviews of Kris Srikkanth describing the catch which "Kapil ka pakda the ooperwala ball of Richards to out karne ka" - no filty meaning intented.
* Kalmadi was asked to organize the Common Wealth Games, and was arrested for taking it in the literal sense.
* Before killing Osama, the US NAVY SEALS asked him, 'Do you have any last wisg?' He replied, 'Yes, kill me before RA.One is released'.
* Jaya became CM and said "Anna naamam vaazhga. MGR naamam vaazhga". Iyengars confused. Again!
* Inflation was a major issue. Especially for Thala Ajith.
* When asked if he does any homework to practice his expressions, Cheran revealed that he does not poop during the entire shooting schedule.
* Kalimozhi sent to Tihar. A visibly happy Raja called the jailor and told him, "(h)otha hai".
* Personally I'm totally irritated by Suriya's constant thoppai exposure
* Finally Baby B is born and Big B's fuss about that entire phase has made people curse that baby instead of adoring it. [...psssst... Undiscolosed sources revealed that BabyB is currently taller than Suriya by a few inches. ]
* Tamil cinema got a vidi velli - Power Star Dr.Srinivsasan. He looks like shaving panna TR, that is, some one who justu missed two million years of evolootion.
* There was an all India meeting to discuss why Prashanth was still acting in movies.
* Gayle to WICB, "Guys, I am finally in awesome form, lets become great team!" WICB to Gayle, "Fack, you are dropped!"
* Indian Kabbadi world champion team goes back home by rickshaw. Govt confessed that they were unaware of the event and thought it was Ghilli climax scene shooting for a Hindi remake.
* 10 Indians applied for Pakistan citizenship after they were harassed by the "Every Indian must read this" messages on Facebook.
* Vidya balan finally sheds her clothes. Vidya Balan went to skin doctor for some treatment. Doctor told, 'It's ok ma, no need to show, yesterday only I saw in night show'.
* Every one who has completed 'saralivarisai' or has a video camera came up with a Kolaveri video.
* Sharad Pawar slapped hard. Doctors confirm that it is a medical miracle that his face is still distorted.
* Godrej agreed to be the official sponsor of the saavi koththu for STR's kaakavalippu problem after seeing his love anthem.
*Jodhida Megamani Lion K.Paarangal told Sachin that Sani bagwan is vakram-ly looking at him after peyarchi from 3rd house. So he has suggested that Sachin ethify nei vilakku in nearest Sani temple, and write 'Sachin 99+1' with kari on the wall.
*Anna Hazare went without food for several days for a Lokpal Bill. Hence became the #2 Googled person in India, behind only Katrina Kaif, who released Chikni Chameli.
*Poonam Pandey announced that she will strip for the New Year bash. Kapil Sibal confirms that she has nothing significant to censor.
* Rajini is back after sever health issues with the blessings of Mahavathar Babaji [who is said to be Rajini's binaami] and he is still confused about what is happening around him. Kochadayan? Sultan? or Rana? So are his fans!
AND
Happy New Year! :)
PS: Don't make resolution and all this year. Ulagam azhiya poguthu. Open the bottle!
PPS: I know its kind of late to post it now.. but its better late than never!

2012,
ajith,
anna hazare,
Babaji,
dr.sreenivasan,
end of world,
India,
Kamal,
katrina kaif,
kolaveri,
mayan,
new year,
ra.one,
rajini,
shiva,
STR,
surya,
T.rajendar,
vishnu,
world cup
Monday, January 23, 2012
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை.
கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு
இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால்
செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ)
ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும்.
தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக
சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம்.
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும்
குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள்
என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற
பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,
யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு
ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம்.
காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும்
ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில்
காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு
முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப்
முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும்,
காதலோடு சேர்த்தியில்லை.
8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி
வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ
சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள்.
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக
தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.
பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு
மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை
யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க
வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக்
அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
Labels:
legend,
life,
sujatha,
ten commandments,
writersujatha,
young
Subscribe to:
Posts (Atom)