Tuesday, April 17, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 11




விடுமுறைக்கு இந்தியா சென்ற 
அமெரிக்க வாழ் இந்தியர்,
"இங்க இந்தியன் புட் எங்கே கிடைக்கும்?" என்றார்!


கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 10



இதற்கு முந்தின வரியில் ஆரம்பித்த 
இக்கவிதை,
இதற்கடுத்த வரியில் 
முடிகிறது...


Wednesday, April 4, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 9




மலை உச்சிப்பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
பள்ளிக்கூட கரும்பலகையில்,
தியேட்டர் கழிவறையில்,
மரீனா கடற்கரையில்,
பல ஆயிரம் முறை காலேஜ் நோட்ஸில்,
பார்க் பெஞ்ச்சில்,
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனது பெயர்,

கார் ஜன்னல் பனியிலும்,
மானிட்டர் தூசியிலும்,
முடங்கிக்கிடக்கிறது.