Tuesday, April 17, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 11




விடுமுறைக்கு இந்தியா சென்ற 
அமெரிக்க வாழ் இந்தியர்,
"இங்க இந்தியன் புட் எங்கே கிடைக்கும்?" என்றார்!


கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 10



இதற்கு முந்தின வரியில் ஆரம்பித்த 
இக்கவிதை,
இதற்கடுத்த வரியில் 
முடிகிறது...


Wednesday, April 4, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 9




மலை உச்சிப்பாறையில்,
கல்லூரி மரக்கிளையில்,
பள்ளிக்கூட கரும்பலகையில்,
தியேட்டர் கழிவறையில்,
மரீனா கடற்கரையில்,
பல ஆயிரம் முறை காலேஜ் நோட்ஸில்,
பார்க் பெஞ்ச்சில்,
சுதந்திரமாய் சுற்றித்திரிந்த எனது பெயர்,

கார் ஜன்னல் பனியிலும்,
மானிட்டர் தூசியிலும்,
முடங்கிக்கிடக்கிறது.

Thursday, March 22, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 8




மயிலில் உலகையே சுற்றி வந்த முருகனிடமிருந்து 
அம்மை அப்பனை மட்டுமே சுற்றி, மாங்கனியை,
விநாயகர் வென்ற போது, 
அருகில் இருந்த நாரதர் தலையில் அடித்தபடி சொன்னார் -

"என்ன கொடுமை சரவணன் இது?!"

PS: This is apparently the best mokh-ka-vithai I have written so far :) closely followed by this




Wednesday, March 21, 2012

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... 7





புதிதாய் வந்திறங்கிய 
ஏரோப்ளேன்..
ஹெலிகாப்டர்..
இரண்டு பஸ்..
நான்கு கார்கள்..
ஒரு கண்டைனர் லாரி..
புதிய மாடல் மோட்டார் சைக்கிள் ..
ஏழு கோச் கொண்ட ரயில்...

என எல்லாவற்றையும் லாவகமாக ஓட்டிவிட்டு,
கடைசியாக 
என்னையும்  யானை   ஆக்கியது 
- குழந்தை..


Tuesday, March 20, 2012

பேஸ்புக் நட்பு




அலைபேசியில் 
குவிந்திருக்கும் எங்களை 
கடக்கையில், அடிவாரத்தில்,
கடந்துபோகும் நண்பனின் முகம்..

அழைக்கலாம் என எத்தனிக்கையில் 
தடுத்துவிடுகிறது 
போன முறை அழைக்காத 
குற்ற உணர்வு..

*****
மறுநாள்
முகப்புத்தக சுவற்றில் 
"ஹாய் டா மச்சான்...எப்படி இருக்க?"

Monday, March 19, 2012

பரப் பார்வை





முதன் முதலாக பூமிக்கு 
வந்திறங்கிய பறவை,
"அட! வானம் இவ்வளவு சிறிதாக தெரிகிறதே!", என்றது..