Saturday, December 22, 2012
Friday, November 9, 2012
சொல்வனம் - ஆனந்தவிகடன் - நவம்பர் இதழ்
கடந்து போதல்
உறங்கிக்கிடக்கிறது ஊர்
கள்வர் நடமாட்டமோ
காதலர் சந்திப்போ
ஓர் உயிரின் விடைபெறுதலோ
புதியதன் வருகையோ
நிகழ்வுகள் ஏதுமற்ற
இன்னுமோர் இரவோ...
அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது
ரயில்
கள்வர் நடமாட்டமோ
காதலர் சந்திப்போ
ஓர் உயிரின் விடைபெறுதலோ
புதியதன் வருகையோ
நிகழ்வுகள் ஏதுமற்ற
இன்னுமோர் இரவோ...
அறியாது ஓடிக்கொண்டிருக்கிறது
ரயில்
உறங்கும் ஊரை
லேசாகச் சிணுங்கி
ஒருக்களித்துப் படுக்கவைத்தபடி.
லேசாகச் சிணுங்கி
ஒருக்களித்துப் படுக்கவைத்தபடி.
- எஸ்.வி.வேணுகோபாலன்
Tuesday, November 6, 2012
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 16
3 வயது
...அல்லது
100 செ. மீ.
...அல்லது
அம்மாவின் நேர்மை
-அரை டிக்கெட்
Labels:
amma,
children,
haikku,
kavithai,
kuzhanthai,
poem,
tamil,
கவிதை,
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்
Tuesday, September 4, 2012
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 15
Saturday, September 1, 2012
முகமூடி - சூப்பரும் இல்லை.. ஹீரோவும் இல்லை..
முதலில் நான் மிஸ்கின் ரசிகன் இல்லை
என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிரேன் . ஆனால் மிஸ்கின் மீது கொஞ்சம் மதிப்பு இருப்பது உண்மைதான். காரணம் அவரது சினிமா திறன் அல்ல. அவர் சினிமாவை வெறும் வியாபாரமாக பார்க்காமல் ஒரு கலையாக பார்ப்பதுதான். அட்லீஸ்ட் அப்படி பார்ப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிராரே அதற்காகவேனும் மதிக்கவேண்டிஇருக்கிறது.
சரி முகமூடிக்கு வருவோம். ஒரு சாதாரண சென்னை இளைஞன். அப்பாவிடம் திட்டுவாங்கும், தன்னை ரவுடியாக நினைக்கும் பெண்ணிடம் காதல் வசப்படும், நண்பர்களோடு தெருக்களில் சுற்றும், குருவிடம் மரியாதையில் பம்மும், அதீத க்லீஷேக்கள் கொண்ட இளைஞன், முகமூடி அவதாரம் எடுத்து, ஊரையே சூறையாடும் திருட்டுக்கூட்டதை வீழ்த்துகிறான். கதை அவ்வளவுதான். இதைச்சொல்ல மிஸ்கின் எடுத்துக்கொண்டது இரண்டே முக்கால் மணி நேரம். இவர் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்பதை முழுவதும் புரிந்துகொண்டுதான் கையில் எடுத்தாரா என்பது தெரியவில்லை. ஹாலிவுட்டில் எடுக்கிறார்கள் என்றால் ஆதற்கு காரணம் அங்கு சாதாரண படங்களில் வெறும் ஹீரோக்கள் நடிப்பார்கள். தமிழ் படங்களில் சாதாரண ஹீரோக்களே சூப்பர் ஹீரோக்கள்தான். உதாரணம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இவர் சூப்பர் ஹீரோ என்று சொல்லிவிட்டு மிகச்சாதாரணமாக காண்பித்தது பெரும் ஏமாற்றம்.
ஜீவா ஆறு மணி நேரம் பயிற்சி செய்தார். ஹாங் காங்கில் நங்கள் ஆடை தயாரித்தோம் என்று பேட்டிகளில் சொல்லி என்ன பிரயோஜனம்? திரையில் பிரதிபலிக்க வேண்டாமா? பாவம் ஜீவா. அவரை விட பரிதாபம் நரேன். கொடூர வில்லன் என்று மிஸ்கின் மட்டும் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். பால் வடிகிறது.
ஒத்துக்கொள்கிறோம். பாட்மேனோடு ஒப்பிடவேண்டாம் என்று நானும் முயற்சி செய்தேன். ஒப்பிட முடியாதபடி நீங்க எடுத்திருந்தால் உங்கள் வேண்டுகோள் நியாயமாகி இருக்கும். பாட்மேனில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களையும் தமிழ் சாயம் பூசி ஆலயவைத்துவிட்டு ஒப்பிடாதே என்று கூறினால் என்ன செய்வது?
பாட்மேன் - ஜீவா
அல்பிரட் - கிரிஷ் கர்னார்ட்
லூசியஸ் - அந்த இன்னொரு கிழவர்
கோர்டன் - நாசர்
ரேச்சல் - பூஜா ஹெட்கே
ஸ்கேர் க்ரோவ் - நரேன்
ராஸ் ஆல் குள் - மாஸ்டர்
இப்படி பல கதாப்பாத்திரங்கள் பாட்மேனை ஞாபகப்படுத்துகின்றன. இதில் பரிதாபம் - இவை அனைத்தும் திணிக்கப்பட்ட பாத்திரங்கள். ஜீவாவின் குடும்பம் ஒரு கீழ் நடுத்தர குடியிருப்பில் இருக்கிறார்கள். அந்தந மாடியில் ஒரு ஆஸ்பஸ்டாஸ் குடிசையில் அவரது விஞ்ஞானி தாத்தா தட்டு முட்டு சாமான்களை வைத்து வித்தை காண்பிக்கிறார். குழந்தைகள் கூட ஆசைப்படாத வகையில் ஒரு ரோபோ வைத்திருக்கிறார். இதில் "Know theyself" போர்டு வேறு தொங்குகிறது. எதோ ஒரு ஷாட்டில் இவரது சுவர் கடிகாரத்தை காண்பிக்கிறார்கள். அதில் லண்டன் கியீன் விக்டோரியா என்றெல்லாம் எதோ எழுதியிருக்கிறது. எதற்க்காக அந்த ஷாட்?
இவர் (கிரிஷ் கர்னாட்) என்ன வேலை செய்கிறார்? ஏன் கம்ப்யூட்டர், ரோபோ, எலக்ட்ரானிக் சாதனங்களை வைத்து பழைய ரேடியோ பெட்டி போர்டையெல்லாம் சம்பந்தமே இல்லாமல் சொல்டரிங் செய்கிறார்? தண்ணிக்காப்பி அம்மாவிற்கு ஹார்லிக்ஸ் தாத்தாவா? எப்படி? இதெல்லாம் விட க்ளைமாக்ஸ் காட்சியில் இவர் ஷெர்லாக் ஹோம்ஸ் ஆடை அணிந்து கொண்டு பைப்
ஊதிக்கொண்டு வருகிறார். தலை சுற்றுகிறது.
இவர் பரவாயில்லை. அதே மொட்டை மாடியில் இன்னொரு தத்தா இருக்கிறார். சைனீஸ் எம்பசிக்கு டிராகன் பொம்மை செய்து கொடுப்பதாக காண்பிக்கிறார்கள். மிகப்பெரிய டிராகன் பொம்மையை சைனீஸ் எம்பசி எப்போதும் அரை போதையில் இருக்கும் தாத்தாவிடமா செய்யக்குடுக்கும்? அதும் தனி ஆளாக செய்து முடிக்கிறார்! முகமூடியின் ஆடையை ஒரே இரவில் வடிவமைத்து லோகோவேல்லாம் செய்து குடுக்கிறார். கவசம் எல்லாம் வைத்துத்தைத்த அதில் வில்லன் குத்தியதும் ஹீரோவிற்கு வலிக்கிறது! இவர் யார் என்று கடைசிவரை யாருக்கும் தெரியவில்லை.
இவருக்கு உதவியாளராக ஒரு கூன் விழுந்த இளைஞர். மிஸ்கின் சிக்ணேச்சராம். என்னத்த சொல்ல?!
வில்லன்களுக்கு வருவோம். ஊர் ஊராய் கொள்ளை அடிக்கும் திருட்டுக்கூட்டம். அதும் ஒன்பது மாசமே ஒரு ஊரை சூறையாடும் கூட்டம். அவர்கள் எதற்கு "டிராகன் குங் பூ" என்று ஒரு பயிற்சிப்பள்ளி நடத்த வேண்டும்? நரேன் ஏன் இடுப்பை வளைத்து வளைத்து நடக்கிறார்? ஒரு கொடூர வில்லனின் நடையா அது? இவருக்கும் ஜீவாவின் மாஸ்டருக்கும் இடையே ஆன ப்ளாஷ் பாக் எந்த விதத்தில் கதைக்கு உதவுகிறது? க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு மரைன் கோஸ்ட் கார்ட் கூட்டத்தையே ஒடுக்குவது ஐந்து பேர் கொண்ட குழுவா? இவை அனைத்தையும் விட தமாஷ் - தேமே என்று அந்தரத்தில் தொங்கும் வான் ஒன்றின் மீது ஒரு வில்லன் சம்பந்தமே இல்லாமல் தாவிக்குதித்து அதன் மேல் பகுதியை (top) பட்டன் கத்தியால் குத்தி உள்ளே இருக்கும் குழந்தைகளை ரகளை செய்கிறார். குழம்புகிறது. இயக்குனரின் குறிக்கோள்தான் என்ன?
சரி இவைஎல்லாம் ஓ.கே. எந்தப்பெண் தனது ஸ்கூட்டியின் பாக்ஸில் ஒரு இருபுக்கம்பி. இரண்டு செங்கல் மற்றும் ஒரு கண்ணீர் ஸ்பிரே வைத்துக்கொண்டு அலைகிறார்? இந்த ஹீரோயின் பார்க்கவும் சகிக்கவில்லை.
போலீஸ்காரர்கள் உடனுக்குடன் முகமூடியிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். முகமூடி என்ற கதாப்பாத்திரம் நம் மனதிற்குள் வந்து உட்க்காரும் முன். "முகமூடி..தமிழ் நாடே உங்கள நம்பித்தான் இருக்கு" என்று அவர்கள் பேசுவது, முகமூடியை இன்னும் நம்மை விட்டு தூரம்தான் அழைத்து செல்கிறது.
காமெரா - ஸ்ஸ்ஸ்ஸ்..தூரத்தில் இருக்கும் அவுட் ஆப் போக்கஸ் ஆசாமிகள் காட்சி முடிவதற்குள் அவசர அவசரமாக போக்கசிற்குள் வருகிறார்கள். ஓடியோ. வண்டியிலோ. கத்திக்கொண்டோ. இறந்துபோயோ. இருட்டிலோ. வெளிச்சத்திலோ. இதேதான் படம் முழுக்க. மகா மட்டம்.
வசனங்கள் - அட போங்க பாஸ்... ஒரு உதாரணம்:
"இவ்ளோ பெரிய வீட்ல போட்லாம் (boat) வச்சு என்ன பண்றாங்க.."
"ஏதோ ப்ளான் பண்றாங்க.."
"என்ன?"
"என்னன்னு தெரியல.."
"என்ன பண்ண போற?"
"என்கிட்டே ஒரு பிளான் இருக்கு!"
வேறு ஏதும் தேவை என்றால் படம் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்க்கு மேல் கரித்துக்கொட்ட இருந்தாலும் இதுவே போதும்.
படத்தின் ஒரே பிளஸ் - கே - இசையமைப்பாளர்.
மிஸ்டர்.மிஸ்கின். உங்களுக்கு நிறைய்ய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். பிடித்திருக்கலாம். அவை அனைத்தையும் அனாவசியாமாக திணிக்காதீர்கள்.
உங்களருகே நிறைய்ய பேர் சிங்கி அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
உதாரணம்: ஒரு கற்பனை உரையாடல்-
நீங்கள் படத்தின் கடைசிக்காட்சியை விவரிக்கும் போது -
"நம்ம ஹீரோ எல்லாத்தையும் காப்பாத்திட்டு டாட்டா காமிச்சுட்டு ஓட ஆரம்பிக்கறான்.. அப்டியே ஜூம் அவுட் பண்ணி லெப்ட் பேன் பண்ணி ஹீரோ ரைட்ல ஓடிட்டே இருக்கான்.. லெப்ட்ல போலீஸ் வருது.. லாங் ஜூம் அவுட்..ஓடிக்கிட்டு இருக்கற ஹீரோ இருட்டுல தெரியாம போயிடறான். ஒரு அஞ்சு செகண்ட் காமிச்சுட்டு அப்படியே ப்ரீஸ் பண்றோம். ஓ.கே?"
"அடடா!" "சார்.. சூப்பர் சார்.." "பலே பலே" - இந்த ஆசாமிகளை முதலில் அடித்து விரட்டுங்கள்.
பொதுவாகவே ஹீரோக்களிடம் நமக்கு நம்பிக்கை உண்டாக வேண்டும். "இவன் நம்மாள்டா" என்று தோன்ற வேண்டும். ஆதற்கு - ஒன்று - அவன் நம்மை நோக்கி வரும்படி காட்சி இருக்க வேண்டும்.. அல்லது.. அவன் பின்னால் நாம் போவது போல காமரா அவனை தொடர வேண்டும். பீ.ஜி.எம்மில் போலீஸ் சைரன் போட்டுக்கொள்ளலாம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். திரையில் ஹீரோ உட்புறம் ஓடும் போது ஜூம் அவுட் - மோசமான காம்பினேஷன். இடைவெளியை கூட்டத்தான் செய்கிறது.
நீங்கள் உங்களையே மிகப்பெரிய இயக்குனராக நினைத்துக்கொள்வதை நிறுத்துங்கள் ப்ளீஸ். நீங்கள் வைக்கும் ஒவ்வொரு பிரேமும் ஆயிரம் கதை சொல்கிறது என்று நினைப்பதை நிறுத்துங்கள். உண்மையில் சொல்லவில்லை. அஞ்சாதே நல்ல படம். மற்ற அனைத்தும் எதோ சுமார் ரகம்தான். நந்தலாலாவை நீங்கள் காப்பி என்று ஒப்புக்கொள்ளும் முன் என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் என்று உதார் விட்டது எங்களுக்கும் தெரியும். கருப்புக்கண்ணாடி போட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் சுழற்றி சுழற்றி, "ஆச்சுவலி" என்று இடைச்செருகி, "இதுக்கு நீங்க கை தட்டனும்.. ப்ளீஸ்" என்று பேசிக்கொண்டிருந்தால் போதாது.
நீங்களே சொன்னது போல். Know thyself. ஆல் தி பெஸ்ட்.
இரண்டாம் பாகம் வேறு வரும் என்றீர்கள். வேண்டாமே!
Labels:
batman,
jeeva,
mugamoodi review,
mysskin,
review,
tamil movies
Friday, August 31, 2012
குட்டிக்கதை - 1
பெங்களூரில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த என் மகன், மருமகள் பேரனோடு கோவிலுக்குச்சென்றிருன்தேன். சன்னதியில் அபிஷேகம் நடந்துகொண்டிருந்தது.
"தாத்தா வாட்ஸ் ஹாப்பனிங்?"
"வின்னி.. ஷூ..சும்மா இரு" என்றாள் என் மருமகள்.
"இருக்கட்டும்மா..இதெல்லாம் எப்போ பாக்க போறான். கேக்கட்டும்.. வின்னி கண்ணா. நாமல்லாம் டெய்லி குளிக்கற மாதிரி கடவுளும் குளிக்க வேண்டாமா. அதான் பண்றாங்க."
"வாட்ஸ் தட் யெல்லோ லிக்விட்?"
"தட்ஸ் கால்ட் டர்மரிக். நாம சோப்பு போடறோம் இல்ல? அது மாதிரி."
அபிஷேகம் முடிந்து அலங்காரத்திர்க்காக திரையை மூடினார்கள்.
"இப்போ வாட்ஸ் ஹாப்பனிங்?"
"டேய் வின்னி லீவ் தாத்தா அலோன்"
"இருடா கேட்டுட்டு போறான்.. வின்னி.. கடவுள் குளிச்சார்ல. இப்போ அவங்கள்ளாம் அவருக்கு அலங்காரம் பண்றாங்க.."
"வாட்ஸ் அலங்காரம்?"
"அலங்காரம் இஸ்... டெக்கரேஷன்..."
"டெக்கரேஷன்?"
"வின்னி டிரஸ் போட்டு விடறாங்க.. நவ் தட்ஸ் எனப்.. அப்பா இவன் இப்படித்தான்.. நீங்க பேச பேச அவனும் கேள்வி கேட்டுட்டே இருப்பான்.."
வின்னியின் முகத்தில் எதோ ஒரு கேள்வி மிச்சம் இருந்தது. நான் என் மகனை பொருட்படுத்தாமல், "என்ன கண்ணா?" என்றேன்.
"இட்ஸ் ஸ்டுபிட்! தே லெட் அஸ் வாட்ச் ஹிம் டேக் பாத். பட் வோண்ட் லெட் அஸ் வாட்ச் ஹிம் டிரஸ்?"
திரை விலகியது.
Labels:
abishegam,
kadavul,
kuttikkathai,
story,
tamil,
thaththa,
turmeric,
அபிஷேகம்,
கடவுள்,
குட்டிக்கதை,
பெங்களூர்
Monday, August 20, 2012
க(வி)தை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 14
"நயாகரா நயாகராதாண்டா..
பாறைல தெறிக்கும் தண்ணீலயே நனைஞ்சுருவோம்னா பாரேன்.."
"நியூ யார்க்ல இருக்கற சரவண பவன்ல
நம்மாள் தாண்டா கல்லா கட்டிக்கிட்டு இருக்காரு!"
"அத்த ஏன் கேக்கற..
நூத்தி பத்தாவது மாடில இருந்து எட்டிப்பாக்கரப்போ
ஒன்னுக்கு வந்ததுதான் மிச்சம்.."
"கொடைக்கனலு என்னடா கொடைக்கனலு..
அங்க சும்மா சுள்ளுன்னு குளுரும் தெரியுமுல்ல?!"
"இந்தா பத்தியா?
நானும் மிக்கி மவுசும் எடுத்துக்கிட்ட போட்டோ!"
காட்டிய புகைப்படத்தில் அவனோடு
எட்வர்டையோ ஜானயோ மறைத்துக்கொண்டிருந்த
மிக்கியின் முகமூடியும் சிரித்துக்கொண்டிருந்தது
"ரோடுன்னா ரோடு..நம்ம ரிங் ரோடுல்லாம் நக்கிட்டு போகணும்..
சோறு போட்டு சாப்பிடலாம்!
நம்ம ஊர்க்காரனுங்க தேரனும் மாப்ள!"
"இந்த கிராண்ட் கான்யான்ட்றாங்ய..
அத மட்டும் பாத்துட்டோம்னா ஊருக்கு வந்துடலாம்"
"பேசாம நீயும் வந்துட்றா..
இங்க இருந்து என்னாத்த கண்ட
வெய்யிலும் புழுதியும்.."
முடிவு 1:
"அதெல்லாம் இருக்கட்டும்டா
பொங்கல் வரைக்கும் இருந்துட்டு போறது!"
"இல்லடா மாப்ள.. ஆபீஸ்ல பீட்ஸா பார்ட்டி..
வர்ஷா வர்ஷம் நடக்கும்..
மேனேஜர்
கோவிச்சுக்குவாப்டி "
முடிவு 2:
"அதெல்லாம் இருக்கடுமடா..
வா ஜிகிர்தண்டா சாப்டலாம்."
"இல்ல மாப்ள இப்போல்லாம்
ஜிகிர்தண்டாவ வயிறு சேத்துக்க மாட்டேங்குது.."
முடிவு 3:
என் நண்பன் என்னவெல்லாமோ பேசிக்கொண்டிருக்கையில்
அவன் பன்னிரண்டாம் வகுப்பில்
என்னைவிட குறைவாய்
மதிப்பெண் எடுத்ததே
அடிக்கடி நினைவில் வந்து போனது..
Sunday, August 19, 2012
How much does Maggie Simpson cost?
Question: How much does Maggie Simpson cost in the opening credits of The Simpson?
Answer: If you use the pause function efficiently in VLC or GOM, you will see that Maggie costs $847.63. But why? Its a figure once given as the amount of money required to raise a baby for one month in the United States.
Tuesday, August 14, 2012
கற்றதும் பெற்றதும்..
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
"எதுக்குப்பா?"
"தொடுங்களேன்!"
சற்று வியப்புடன் தொட்டார்.
"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத்தார்.
"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."
"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.
"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.
மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!
டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromise.. (படிப்படியான சமரசங்களால் ஆனது).
சுஜாதா

Monday, August 13, 2012
கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 13
கீழே ஒரு நீள் செவ்வகம் விட்டு,
மேலிருக்கும் இரு
முனைகளிலும்
முக்கோணம் செய்து..
விடப்பட்ட செவ்வகத்தை இரு புறமும்
நூற்றெண்பது டிகிரி மடக்கி,
நீட்டி நிற்கும் தாளினை மீண்டும் மடக்கி,
சதுரமாக்கி..
பாதியை மடக்கி,
மீதியை பின் மடக்கி,
மேலும் மடக்கி,
கீழும் மடக்கி,
விரித்து - ஒரு வழியாக
கப்பலாகிப் போன
டைரியின் நடுப்பக்கத்தில்
என்ன எழுதப்பட்டிருக்கும்
இப்பெருமழை பெய்திருக்காவிடில்?
Friday, August 3, 2012
பின்னோட்டம்
அப்பா சொன்ன பேச்சை
கேட்டிருந்தால்?
பன்னிரண்டாம் வகுப்பில்
இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால்?
அந்த விபத்தை எப்படியாவது
தவிர்த்திருந்தால்?
அவளை சந்திக்காமலே
இருந்திருந்தால்?
சுயமாய் முன்பே
சிந்தித்திருந்தால்?
தமிழை முறையே
பயின்றிருந்தால்?
இப்படியாக
எண்ணியபடி தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்:-
இப்படியாக
எண்ணியபடி தூங்கிப்போன ஒரிரவின்
அற்புதமான கனவில்:-
பத்தாண்டுகள் பின்னோடி,
அப்பாவின் சொல் கேட்டு,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை தவிர்த்து,
மூச்சுத்திணறப் பாடம் படித்து,
அவளோடு முதல் பார்வை தவிர்த்து,
விபத்தன்று வீட்டிலேயே முடங்கி,
தமிழை முழுதாய் பயின்று,
சுயமாய் முடிவெடுத்து,
பின்
நகரத்தின் வேறோர் மூலையில்
படுத்தபடி
பட்டியலிட்டுக்கொண்டிருந்தேன்
எதை எதையோ
தவிர்த்திருக்கலாமே என்று...
Monday, July 30, 2012
Thursday, July 26, 2012
Wednesday, July 25, 2012
The most mind boggling example of time travel paradox..
Its a story by Robert Heinlein titled - All You Zombies.. The summary goes like this! -
A baby girl is mysteriously dropped off at an orphanage in Cleveland in 1945. "Jane" grows up lonely and dejected, not knowing who her parents are, until one day in 1963 she is strangely attracted to a drifter. She falls in love with him. But just when things are finally looking up for Jane, a series of disasters strike. First, she becomes pregnant by the drifter, who then disappears. Second, during the complicated delivery, doctors find that Jane has both sets of sex organs, and to save her life, they are forced to surgically convert "her" to a "him." Finally, a mysterious stranger kidnaps her baby from the delivery room.
Reeling from these disasters, rejected by society, scorned by fate, "he" becomes a drunkard and drifter. Not only has Jane lost her parents and her lover, but he has lost his only child as well. Years later, in 1970, he stumbles into a lonely bar, called Pop's Place, and spills out his pathetic story to an elderly bartender. The sympathetic bartender offers the drifter the chance to avenge the stranger who left her pregnant and abandoned, on the condition that he join the "time travelers corps." Both of them enter a time machine, and the bartender drops off the drifter in 1963. The drifter is strangely attracted to a young orphan woman, who subsequently becomes pregnant.
The bartender then goes forward 9 months, kidnaps the baby girl from the hospital, and drops off the baby in an orphanage back in 1945. Then the bartender drops off the thoroughly confused drifter in 1985, to enlist in the time travelers corps. The drifter eventually gets his life together, becomes a respected and elderly member of the time travelers corps, and then disguises himself as a bartender and has his most difficult mission: a date with destiny, meeting a certain drifter at Pop's Place in 1970.
The question is: Who is Jane's mother, father, grandfather, grand mother, son, daughter, granddaughter, and grandson? The girl, the drifter, and the bartender, of course, are all the same person. These paradoxes can made your head spin, especially if you try to untangle Jane's twisted parentage. If we draw Jane's family tree, we find that all the branches are curled inward back on themselves, as in a circle. We come to the astonishing conclusion that she is her own mother and father! She is an entire family tree unto herself.
Thanks : Quora
Link to read the entire story: http://emilkirkegaard.dk/en/wp-content/uploads/Robert-A.-Heinlein-All-You-Zombies.pd
For movie lovers - please do watch the below movie : http://www.imdb.com/title/tt0910554/ - Severely underrated time travel movie!
Labels:
cerebral,
confusing,
cool,
english,
fun,
interesting,
mindbending,
paradox,
short story,
summary,
time travel
Monday, July 23, 2012
வீணையடி நீ எனக்கு...
வீணையடி நீ எனக்கு...
பாடல் வரிகள் :பாரதியார்
குரல் : யேசுதாஸ், நீரஜா
இசை: வைத்யநாதன்
குரல் : யேசுதாஸ், நீரஜா
இசை: வைத்யநாதன்
பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு,
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! நல்லழகே!
ஊனமறு நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !
நல்ல உயிரே கண்ணம்மா !
வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு
Friday, July 20, 2012
The Dark Knight Rises - The legend lives!
With great difficulty and only a really few slips, I had maintained a media blackout for this movie, avoiding advertisements, articles, descriptions, even unsubscribing the friends who post anything about The Dark Knight Rises on facebook.. so I wouldn't know what to expect.
(I am going to type some garbage about what all went through me before watching the movie.. so if you dont give a shit - scroll down and look for a red line.. - continue from there)
However, I watched Batman Begins, a month ago, in preparation to refresh myself on the story and get to the mood to watch the final installment from Nolan. It struck me why we all love Nolan's Batman.. it is because he kept it simple! Then waited almost a week to watch Dark Knight; and just then I heard the news - about three back to back shows starting with Batman Begins, The Dark Knight and ending with The Dark knight Rises - and all in IMAX!
How can I miss this? :) But is this even a normal behavious? Is it even possible to sit inside an auditorium watching three back to back incredible movies!? Wont we get tired? Will I endure?! I'll have to wait and see.. on July 19th.
So yesterday it happened! Me and my friend (Varun) went to the theaters, waited in que for more than 4 hours, rushed to grab the center seat of the hall.. and then it happened! 9 hours of Batman-ia!
It started with Begins ..3 hours later - came The Dark knight - the movie which I deeply regretted for not having watched in IMAX. It was happening right there in front of me. And as I watched, I was struck once again by how utterly mesmerizing Heath Ledger is as the Joker. I've seen The Dark Knight dozens of times, but every time I see it, I find something deliciously unnerving to admire about the performance that gives the film its twisted soul..
After having watched over 6 hours now, I had all this expectations on how the last three hours are going to be.. more than expectations - I had questions.
Heath Ledger's character creates a major obstacle for Rises -- being compared to one of the greatest films ever while lacking one of the greatest performances ever. Will Bane atleast equal Joker? If not in performance, at least in challenging Batman? What will happen to Batman after having taken the blame for Harvey Dent's crime? Is he going to die?! Is his legacy going to live? Is there going to be another Batman?
The second movie in the history of trilogies is easier for a creator to make. Because they dont have to introduce a character.. and they don't have to wrap things up. The characters get to be all the delicious cream filling! Will Nolan wrap things up properly?
And finally, Nolan has proved himself to be one of the very best directors of his generation, especially since his last two films, The Dark Knight and Inception, are universally-acclaimed masterpieces. That only means that to avoid disappointing his fans, Nolan has to outdo himself and somehow top not one, but two of the greatest movies ever made.
Well, all I had to do was wait...for another 20 minutes.
------------------------------------------------------------
First things first:
Thanks Nolan for
- The greatest and the most sensible comic-book-super-hero trilogy ever, yet.
- The Joker
- The Batman
- The fact that you resisted the urge to jump on the 3D bandwagon for the caped crusader’s swansong and more than an hour long IMAX footage! Certainly the action sequences, including the spectacular opening, would draw bigger gasps in the format.
Synopsis:
What Worked:
- Everything!
This script demands Batman to share space with a lot of characters mentioned above, including Bruce Wayne. And each character has its own role to play. The plot mentioned in the synopsis is just the central story of an increasingly tangled 3 sub plots: a slinky, burgling Catwoman, a square-jawed beat cop and lots of confusing financial shenanigans with the shareholders of Wayne Enterprises. - and it all ends with the Dark Knight rising in a final crescendo.
The scope of The Dark Knight Rises is much larger than its predecessors, with hundreds of extras, big chases and battles through city streets, and some new Batman hardware. In fact I have never seen in a movie, a city getting destroyed brick by brick, like this one before! Everything goes down - form subway trains to flights - from tunnels to bridges - from sky scrapers to football stadiums - all with stunning visual effects!
- The fury and speed of Bane
Bane is physically fast and powerful than Batman: first of his kind to appear in Nolan's trilogy. He takes down Batman in their first duel like cracking nuts!
The fury with which he takes down the stock market - shatters the city's basement, is just too overwhelming. All these dastardly plot unfolds but Bruce is physically and mentally unable to stop gangs of mercenaries.
- The new comers to the series
While newcomers Blake and Tate are functional to the story, only Selina Kyle (aka Catwoman), adds some zest to the film. Elegantly sexy and dangerous with a twinkly-eyed smirk at the ready, Hathaway plays the slick thief with just enough restrained humor to almost get a smile out of the glum Wayne.
- Emotions
- Hans Zimmer
- Nolan
Of course. For everything - especially for his writing. I will never get tired of his one liners!!
- Zimmer
Zimmer, for the most part of the movie, he has done the same commendable job. But between, Bale's batman voice, Hardy's Bane voice and Zimmer's BGM - We literally look at the screen without even able to hear a single word at times.
- Seriously, Nolan?!
The movie involves a bomb with a flashing LED display :)
- Gotham City
In Batman Begins - if you notice closely, you cannot identify any known city when they are showing Gotham. Its very much its own city. It doesnt look like anything else. In Dark Knight - Gotham is an amalgum of few known cities - Chicago - Pittsburgh - Toronto etc..But in this movie - Its just New York in plain sight! We lose touch with Gotham which our super hero is trying to save.

The Dark Knight Rises takes place eight years after The Dark Knight. Harvey Dent, the crusading district attorney whose transformation into the villain Two Face was kept secret from the public, has been made into a hero and martyr, and a law named in his honor has helped clean up Gotham's streets, Dent Act, which apparently locked up almost all the criminals. No longer needed, Batman has disappeared after taking the blame for murders Dent committed, and Bruce Wayne (played by Christian Bale) has become a recluse. Wayne Industries is going down meanwhile.. and its all left to a single savior Miranda Tate (Marion Cotillard)
But when a masked villain named Bane (Tom Hardy) , to complete Ra's Al Gul's goal, appears in Gotham with a band of mercenaries with plans to take over the city, Batman is forced out of retirement to confront him with the help of new acquaintances - a driven young cop named John Blake (played by Joseph Gordon-Levitt) and an unlikely ally in the form of a burglar, named Selena Kyle (played by Anne Hathaway) and the old ones - Alfred (Michael Caine), Gordom (Gary Oldman) and Lucius Fox (Morgan Freeman).
I will stop here and wont go to details of twists and turns in the script. What Worked:
- Everything!
This script demands Batman to share space with a lot of characters mentioned above, including Bruce Wayne. And each character has its own role to play. The plot mentioned in the synopsis is just the central story of an increasingly tangled 3 sub plots: a slinky, burgling Catwoman, a square-jawed beat cop and lots of confusing financial shenanigans with the shareholders of Wayne Enterprises. - and it all ends with the Dark Knight rising in a final crescendo.
The scope of The Dark Knight Rises is much larger than its predecessors, with hundreds of extras, big chases and battles through city streets, and some new Batman hardware. In fact I have never seen in a movie, a city getting destroyed brick by brick, like this one before! Everything goes down - form subway trains to flights - from tunnels to bridges - from sky scrapers to football stadiums - all with stunning visual effects!
- The fury and speed of Bane
Bane is physically fast and powerful than Batman: first of his kind to appear in Nolan's trilogy. He takes down Batman in their first duel like cracking nuts!
The fury with which he takes down the stock market - shatters the city's basement, is just too overwhelming. All these dastardly plot unfolds but Bruce is physically and mentally unable to stop gangs of mercenaries.
- The new comers to the series
While newcomers Blake and Tate are functional to the story, only Selina Kyle (aka Catwoman), adds some zest to the film. Elegantly sexy and dangerous with a twinkly-eyed smirk at the ready, Hathaway plays the slick thief with just enough restrained humor to almost get a smile out of the glum Wayne.
- Emotions
Michael Caine - the only character who thinks and talks like us - plays a really emotional role in this movie of madness. That one scene where he confronts Wayne - just stood out - and was cut above all the special effects in the movie.
- Hans Zimmer
Do I even have to mention why?
- Nolan
Of course. For everything - especially for his writing. I will never get tired of his one liners!!
What did not work?
- Everything...that loses when compared to Dark Knight..or rather Joker!
I think the biggest problem with The Dark Knight Rises is the bar set by its predecessor, The Dark Knight, and particularly, the ghost of Heath Ledger and his groundbreaking, Oscar-winning performance as the Joker. Bane simply isn't as interesting, menacing, unnerving and magnetic as the Joker, and, to be honest, the effect put on Bane's voice most of the times makes him hard to understand. Ledger's brilliant performance embodies the perfect counterpoint to the psychology of Bruce Wayne, where trauma drives one man to an obsession with chaos and the other with justice.
The social commentary in the Joker's message about how little it takes to drive a civilization to barbarity is also much more thought-provoking than Bane's claim of wanting to save Gotham from inequality and corruption. Bane is menace.. I agree.. But Joker is madness, mayhem and an enigma!
- Zimmer
Zimmer, for the most part of the movie, he has done the same commendable job. But between, Bale's batman voice, Hardy's Bane voice and Zimmer's BGM - We literally look at the screen without even able to hear a single word at times.
- Seriously, Nolan?!
The movie involves a bomb with a flashing LED display :)
- Gotham City
In Batman Begins - if you notice closely, you cannot identify any known city when they are showing Gotham. Its very much its own city. It doesnt look like anything else. In Dark Knight - Gotham is an amalgum of few known cities - Chicago - Pittsburgh - Toronto etc..But in this movie - Its just New York in plain sight! We lose touch with Gotham which our super hero is trying to save.
----
Nolan had a HUGE burden on his shoulders to deliver a movie at least on par with Dark Knight. And with him directing, it was seemingly possible. But with too many characters sharing the screen and less impressive Bane, all these characters and Batman lose to just Batman Vs Joker from DK.
Having thought about it, he could not have made a stronger villain, better than Joker. Its not like he can't make one. But I think he refused to do so, because, this film should leave us with Batman's impact. The impact that reminds us of Batman when we think about the movie.. of the need for the Batman.
I obviously see Nolan's intentions in making the apt ending for his trilogy - for the legend to live on (remember the wrap up problem in a trilogy?). For this, the story line had to bloated - it had to do too many things too quickly which dilutes the grit in the screenplay. But 164 minute movie moves at a bullet speed nevertheless!
Keeping all that apart - as you might expect from the creator of Inception and Memento, there are surprises both in the story and in the storytelling. But the biggest surprise may just be how satisfying Nolan has made his farewell to the Dark Knight trilogy that many fans will wish he'd extend to a 10-part series, at least.
I am a slave to Nolan's imagination. And this movie proves me once again, its ok to be that slave. I should not forget about the production value of DKR - Camera, costumes, sets, production design and the rest are superior than any of his previous films.
Rises is certainly an epic, ambitious, dazzling, and provides a satisfying end to Nolan's trilogy. And to be honest, I sort of feel like this review is premature since, like most Nolan films, I really feel like I need to see it again to look for nuances and story points I might've missed. Dark Knight Rises is very impressive and definitely worth seeing, but without a once-in-a-lifetime performance like Ledger's Joker to provide the pulse, we'll have to be content with a final chapter that certainly delivers, but in a trilogy that peaked in the middle.
Having said these, all that I am thinking about right now is -
What next Nolan?! :)
Labels:
anne hathaway,
bane,
batman,
cat woman,
christian bale,
Christopher nolan,
dark knight,
hans zimmer,
joker,
movies,
review,
rises
Subscribe to:
Posts (Atom)