Monday, January 30, 2012

Ilayaraja is back!! 'Dhoni' Music review!


Ilayaraja  is back with his old ways! He has recorded the songs and BGM live for Prakash raj's directorial venture - Dhoni. The trailer looked melodramatic but the BGM was quite impressive from the Zen of music, Ilayaraja. It would be untrue if I said I was eagerly expecting a brilliant Ilayraja album. I know the golden era is over. But even now I never fail to listen to his albums at least once just not to miss few gems which only he can give [like Maa ganga, Om Shivo om - Naan Kadavul, Kuthikkira Kuthirai - Azhagarsaamiyin kuthirai]. I stumbled upon this post today in facebook and learnt that Dhoni songs were released. And like what all staunch Ilayaraja fans do, I listen to the songs... and rest was just magical...


                                           

Before going to the review, I should tell from where I got the above video. I got the above video from KuralTV website :)


Chinna kanniley is what Raja would have conjured up for director Faazil – the strangely Christian sounding tune, kids’ chorus, all add up to a simple, highly appealing song; Shreya Ghoshal is in fabulous form here, but Naresh Iyer sounds odd and vastly unlike himself, for some inexplicable reason. If thats what he calls voice modulation, he should listen to the very next song in the album - Vaangum panathukkum - sung by none other than SPB.


Na.Muthukumar’s  fanciful lyrics around middle-class living, in Vaangum panathukkum, is accentuated by SPB's singing and Raja’s wonderful orchestration that is surprisingly free from his standard, modern accompaniments! SPB has played round in this song with full freedom like how a new wife would cook.. even though it tastes ridiculous, we are just fine with that. IR should've felt the same when SPB sang to his tune after a while!


Thaavi thaavi and Vilayaattaa are instantly reminiscent of Raja’s golden age – incredibly beautiful music for heartfelt tunes and surprisingly synth-free, again. 


Raja sings like only he can in Thaavi thaavi, fully expressing the song’s meaning in his age-withered voice – the violin orchestra and the overall sound is absolutely mesmerising! Hariharan’s Vilayatta is equally beautiful – a slow, haunting tune, again propped by highly imaginative violin usage! It’s other version by Shreya Ghoshal is even better! 


After what felt like eons, here’s an Ilayaraja soundtrack that brings back his glory days, sans synth and with superb orchestration that the man is known for! It’s amazing to listen to an Ilayaraja soundtrack so clean and earnest in its overall appeal, after such a long time, probably after Pithamagan!


Listen to all the songs here - http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=T0003314



Friday, January 27, 2012

Happy new year 2012

As I write this, India is mukking in Aus. 11 paeru. Moochu thenara thenara adikkaranunga. Mokka start to 2012. Mokka ending also predicted by Mayans. And the Gods are probably talking about it.

Shiva: Dei Vishnu
Vishnu: Yes mama..wassup?
Shiva: I am only destroyer no?
Vishnu: Yes mama
Shiva: Then why you need Kalki avatharam? Sit simply.
Vishnu: 10 is very round number da. They took many movies too with that name. So I will wonly take off da. Not you. People will get confused if you go now! They will even be dissapointed to see you!
Shiva : Whats with  the 10? 
Vishnu : Im teliing you no? It looks good. See, 5 pandavas. 100 gauravas. 10 avatars. If you think about it, Indra is having 4 heads. Which feels incomplete. Even in Ramayan, I told that Valmiki to write it as 15 years. He only wrote it as 14. Many people asking me why 14 years you go to forest? If it were 15, no question. Even for Ravanan, 10 heads. No one questions why?! Got it?
Shiva: Ok po, when you are taking da?
Vishnu: This year only, I think... at least thats what Mayans told me!
Shiva: What?? This year-a? Have you taken birth and all?
Vishnu: Yes da
Shiva: Adapaavi. Who?
Vishnu: Sachin da. Even in his name I have placed 'ten'. Sachin Tendulkar. 10 in english. Dul is blast in Tamil. Kar is do in Hindi. Even his jersy number is 10. When he changed his number to 99, his form dropped! Why? Because it wasn't round! People also know. They call me God down there.
Shiva: Semma. Destroy off today then. Very tiring, this job.
Vishnu: Pls machi. Innum orey oru century adichuttu... it will be 100, 100s. What a feat!
Shiva: Aiyo, bleddy fellow, what is it with you and round numbers? I give you till end of year ok? If not I will destroy off.
Vishnu: Nanbaen da!


Ok mama now tune change-u.. ready? 1...2...3....4...


2011 was a good year for me, apart from me going to the verge of getting fired from the previous company . Few days back, I spoke to Madhan about what happened to us in 2011. I extended that thought for the past 10 years which is and will be the most crucial years in my life. 14-24. I've moved on from being a boy struggling to cope up with a breaking voice to a young man who trims his beard twice, just to be comfortable looking at himself in the mirror. I have grown, reading books, watching movies/cricket and relishing my food...


The more I think about it, the more I avoid writing about it.. at least in the blog. Those things can be said and done later. But what to write about 2011? Let me play safe here. Let me put down few things which comes to my mind when I think about 2011. 

* Gautham Menon released Nadunisi Naaigal without any BGM. Also without any story, screenplay and direction. As I told you, I have grown to like movies like never before. It would be dumb if I say I get sad these days after I see a good movie.. I am sad because the number of new good movies that I can see is now minus one! So after Nadunisi naaigal, I was very happy!

* Animal Planet acquired 50% stake in Kural TV. TR released the Afro music that has since been scientifically proven to turn on a specific species in female hippopotamus.

* India won the cricket world cup after 28 years. Indians were overjoyed that there will be no more Hindi interviews of Kris Srikkanth describing the catch which "Kapil ka pakda the ooperwala ball of Richards to out karne ka" - no filty meaning intented.

* Kalmadi was asked to organize the Common Wealth Games, and was arrested for taking it in the literal sense.

* Before killing Osama, the US NAVY SEALS asked him, 'Do you have any last wisg?' He replied, 'Yes, kill me before RA.One is released'.

* Jaya became CM and said "Anna naamam vaazhga. MGR naamam vaazhga". Iyengars confused. Again!

* Inflation was a major issue. Especially for Thala Ajith.

* When asked if he does any homework to practice his expressions, Cheran revealed that he does not poop during the entire shooting schedule.

* Kalimozhi sent to Tihar. A visibly happy Raja called the jailor and told him, "(h)otha hai".

* Personally I'm totally irritated by Suriya's constant thoppai exposure

* Finally Baby B is born and Big B's fuss about that entire phase has made people curse that baby instead of adoring it. [...psssst... Undiscolosed sources revealed that BabyB is currently taller than Suriya by a few inches. ]

* Tamil cinema got a vidi velli - Power Star Dr.Srinivsasan. He looks like shaving panna TR, that is, some one who justu missed two million years of evolootion.

* There was an all India meeting to discuss why Prashanth was still acting in movies.

* Gayle to WICB, "Guys, I am finally in awesome form, lets become great team!" WICB to Gayle, "Fack, you are dropped!"

* Indian Kabbadi world champion team goes back home by rickshaw. Govt confessed that they were unaware of the event and thought it was Ghilli climax scene shooting for a Hindi remake.

* 10 Indians applied for Pakistan citizenship after they were harassed by the "Every Indian must read this" messages on Facebook.

* Vidya balan finally sheds her clothes. Vidya Balan went to skin doctor for some treatment. Doctor told, 'It's ok ma, no need to show, yesterday only I saw in night show'.

* Every one who has completed 'saralivarisai' or has a video camera came up with a Kolaveri video.

* Sharad Pawar slapped hard. Doctors confirm that it is a medical miracle that his face is still distorted.

* Godrej agreed to be the official sponsor of the saavi koththu for STR's kaakavalippu problem after seeing his love anthem.

*Jodhida Megamani Lion K.Paarangal told Sachin that Sani bagwan is vakram-ly looking at him after peyarchi from 3rd house. So he has suggested that Sachin ethify nei vilakku in nearest Sani temple, and write 'Sachin 99+1' with kari on the wall.

*Anna Hazare went without food for several days for a Lokpal Bill. Hence became the #2 Googled person in India, behind only Katrina Kaif, who released Chikni Chameli.

*Poonam Pandey announced that she will strip for the New Year bash. Kapil Sibal confirms that she has nothing significant to censor.



* Rajini is back after sever health issues with the blessings of Mahavathar Babaji [who is said to be Rajini's binaami] and he is still confused about what is happening around him. Kochadayan? Sultan? or Rana? So are his fans!

AND

Happy New Year! :)





PS: Don't make resolution and all this year. Ulagam azhiya poguthu. Open the bottle!



PPS: I know its kind of late to post it now.. but its better late than never!

Monday, January 23, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…



1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, 
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. 
கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு 
இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.



2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். 
ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் 
செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) 
ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.






3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். 
தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக 
சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். 
இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் 
குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.



4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் 
என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற 
பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.






5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், 
யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு 
ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.



6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு 
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத 
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.




7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். 
காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் 
ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் 
காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு 
முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் 
முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், 
காதலோடு சேர்த்தியில்லை.



8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி 
வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ 
சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். 
உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக 
தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். 
பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.





9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு 
மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.


10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை 
யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க 
வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் 
அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.



இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

Saturday, January 21, 2012

Bharathi tagged himself

1. One thing I'm very much afraid of

Seclusion. I just can't stand being left out!

2. Two incidents I can never forget in my life

One : Veeraasaamy - marana gethu!!

Two: I blindfolded myself one day for no particular reason; the next day I donated my eyes. Its terrible to be visually impaired!!

3. Three books I'd love reading again and again

a) Shantaram - Gregory Davis
b) Baala kandam - Na. Muthukumar
c) Alchemist - Paulo Coelho


4) Four women who are most beautiful

Paz Vega 
Amelie Paulon
Penelope Cruz 
Shanmugi Maami ["Munnazhagum nalla irukuthu ; pinnazhagum nalla irukuthu... ;)"]

5) Five of my favorite food items

[just the five??enna koduma ithu??] Curd rice and pickle, Parota and Salna, Briyani and thalcha , Dosai and Kotchu :-) , Noodles

6) Six words you use very often

a) adangoyyala!!
b) ssssaaaaaa!!
c) ithellam oru polappa!
d) aahaaa!!
e) saniyane!!
f) kena!

7) Seven things I like about myself

a) why
b) split
c) into
d) seven
e) different
f) things
g) ?

8) Eight film personalities who are your all-time favorites
a) Rajini            
b) Kamal
c) Sujatha        
d) Ilayaraja        
e) Mani Ratnam
f)  P.C.Sree Ram
g) Crazy Mohan
h) A.R.Rahman  

i) Vijayakanth
j) Ramarajan
k) T.Rajendar [ da man!! ]

[Im damn serious abt the last three!!]


9) Nine movies you don't mind watching again n again

a] Anbe Sivam
b] Hey Ram
c] Forrest Gump
d] Amelie
e] Shrek
f]  Pirates of the Carribean 1 and 2
g] Fight Club
h] Its a Wonderful Life
i]  Midnight in Paris

10) Ten songs you would listen to everyday
a ] Forrst Gump - Feather Theme ( falling in love with it over and over again )
b]  Mounam pesiyathe theme
c]  Puthu Vellai Mazhai - Roja
d]  Unnidam mayangugiren sollathan nerungugiren..
e]  Senthazham poovil - Mullum malarum
f]   All 'Nizhalgal' songs
g]  Unnai naan ariven - Guna
h] Nijanga - Kotha bangaru lokam
i]  Thaen sinthuthae vaanam
j]  Netru illatha maatram - Puthia Mugam

(these songs are just from top of my mind... )

Wednesday, January 18, 2012

மழை வகை - Vikatan Kavithai


நேற்று பெய்த மழை
ஸ்ருதியினுடையது.
'தண்ணி நூல்’ என்று
பெயர் வைத்திருந்தாள்.

இன்றைய மழை
அமுதா பாப்பாவினுடையது.
'டம் டம்’ என்பது
அதன் பெயர்.

நாளைய மழைக்கு
'ரெயின்’ எனப் பெயர்வைத்துக்
காத்திருக்கிறான்
டிச்சாங்கா எனப்படும்
த்ரிஷாங்கன்.

காலங்காலமாக
கனகோடி நூற்றாண்டாக
வையத்தை வாழ்விக்க
பெய்யெனப் பெய்யும்
இந்தப் பெருமழை
புன்னகையோடு
பிள்ளைகள் வைக்கும்
பெயருக்காகவும்
பெய்யுமோ!

- ஸந்த்யா ஸ்வரூபன்

Saturday, January 14, 2012

வேட்டை - review


கண்டிப்பாக மசாலா படம்தான். நான்கு பாடல் நான்கு பைட் இருக்கும் என்று தெரிந்துதான் போனேன்...ஆனாலும் ...

லிங்குசாமி மீண்டும் 'ரன்' மாதிரி ஒரு படம் எடுக்க விரும்பியது  தவறில்லை . 'ரன்' மாதிரியே எடுத்ததுதான் தவறு. அண்ணன்-தம்பி. அண்ணி-தம்பி. தம்பி-காதலி.  வில்லன்(கள்).

கதை:

 'ப்ளாட்' நன்றாக இருந்தாலும் சுவாரசியம் ஊட்டும் தருணங்கள் இல்லை. 'மிஸ்டேக்கன் ஐடென்டிட்டி' - with a difference... இதை 5 நிமிட குறும்படமாக எடுத்திருந்தால் அருமையாக இருந்திருக்கும். எதற்கு மூன்று மணி நேரம்?யோசித்துப்பார்த்தால் சொல்வதற்கு வேறு ஒன்றுமே இல்லை. மாதவன், ஆர்யாவிடம் லிங்குசாமி கதை சொல்லும்போது என்ன சொல்லியிருப்பார்? சத்தியமாக தெரியவில்லை.




மாதவன் - தமிழில் நடித்தால் மட்டமான படங்களில் (மன்மதன் அம்பு, ஆர்யா, ரெண்டு) மட்டுமே நடிப்பேன் என்று கங்கணம் கட்டி இருக்கிறாரா?. மணிரத்னம் படத்தில் மட்டும் நல்ல பாத்திரங்கள் நடிப்பேன் என்று வீம்பு பிடித்தால் ஞாயமா? அட நீங்க ஹிந்தி படத்துல மொக்கையா நடிச்சா கூட பரவால்ல. எங்களுக்கு தெரியாமலாது இருக்கும்ல?

ஆர்யா - இவரை படம் முழுவதும் அனைவரும், (சில சமயம் அவரே)   சிங்கம், தங்கம், சூறாவளி என்கிறார்கள் . ஏன் என்று தெரியவில்லை.. நடனம், நடிப்பு, சண்டை என்று ஒன்றுமே வரவில்லை. பாலாவிடம் பயின்ற பிறகும் இப்படி மொக்கை போட்டால் என்ன செய்வது?

தம்பி ராமையா ஏன் எல்லா படத்திலும் கான்ஸ்டபிள் பாத்திரத்தில் நடிக்கிறார்??

நாசர் - ஐய்யோ பாவம்.

சமீரா ரெட்டி, அமலா பால்... அட போங்க பாஸ்.

இவர்கள் அனைவருக்கும் மேலாக என்னை மிகவும் 'கவர்ந்த' பாத்திரம். 'அண்ணாச்சி'.  உத்ரான்ச்சல் மாநிலத்தில் இருந்து வெள்ளை வெளேர் என்று குர்த்தா போட்ட ஒருவரை காண்பித்து - அண்ணாச்சி என்கிறார்கள். 
தூத்துக்குடியில் எல்லா ரவுடிகளும் அண்ணாச்சிகள் தானா? பிறந்தவுடன் அனைவரும் அவரை அண்ணாச்சி என்று அழைக்க ஆரம்பித்து விடுவார்களா? அண்ணாச்சிகளுக்கு பெயரே அண்ணாச்சிதானா? 
இவரை ஒரு சேட் ஜியாக காண்பித்திருக்கலாமே? ஒரு 'சேட் ஜி' தூத்துக்குடியில் ரவுடி ஆகக்கூடாதா? தூத்துக்குடியில் பல 'சேட் ஜி'க்களே கருப்பாக இருக்கிறார்கள். அண்ணாச்சி பத்திரத்திற்கு ஒரு கப்பூர் மண்டையன். அவருக்கு பதில் நிஜமாகவே ஒரு அண்ணாச்சி பழத்தை திரையில் காண்பித்து  'அண்ணாச்சி அவன தூக்கணும் அண்ணாச்சி' என்று சக அல்லக்கைகள் பேசி இருந்தாலாவது நம்பும்படி இருந்திருக்கும்.



இப்படி nammaye அபத்தமாக பேச வைத்து விடுகிறார் லிங்கு.



இன்னும் முடி வெட்டாமல் குளிக்காமல் தமிழ் சினிமாவில் ரவுடிகள் ஏன் வருகிறார்கள்? எங்கே இருக்கிறார்கள் இவர்களெல்லாம்? அனைவரும் அண்ணாசியோடு சேர்ந்து பைல்ஸ் வந்தார்ப்போல் கத்துகிறார்கள். குமுறுகிறார்கள்.

"ஏதாவது பண்ணனும் அண்ணாச்சி". 
"இனி என்னோட ஒவ்வொரு அடியும் வேற மாதிரி இருக்கும்.." - இப்படி இப்படி படம் நெடுக பேசுகிறார்களே தவிர ஒன்றும் செய்யவில்லை 


இதற்க்கெல்லாம் மேலே அபத்தமாக நிறைய காட்ச்சிகள். ஆர்யாவை வில்லன் கும்பல் அடித்து நொறுக்கும் போது, மாதவன் கூண்டின் மீது ஏறி கஷ்டப்பட்டு வர வேண்டிய அவசியம் என்ன? கதவை திறந்து வந்திருக்கலாமே? கூடைக்குள் வெடிகுண்டு இருக்கிறதென்றால், கூடையை வெளிய எரிந்திருக்கலமே? அதை காரிற்குள் வைத்து விட்டு வில்லன்கள் ஓடி வர, கார் வெடிக்கிறது... போங்க டா டேய்!!

திரைக்கதை என்று டைட்டில் கார்டில் போட்டுக்கொள்கிறார் லிங்கு. தமிழ் நாட்டில் பச்சை குழந்தைக்கு தெரிந்த திரைக்கதை அபத்தம் இவருக்கு தெரிய வில்லை. முந்திய காட்சியில் நடந்த சம்பவத்தை, அடுத்த காட்சியில் இன்னொரு கதாபத்திரத்திடம் வரி வரியாக விவருப்பது ... - சாரி நீங்க வளரனும் லிங்கு!

இதெல்லாம் விடுங்க... சண்டை காட்சிகளில் வில்லன்/ஹீரோ முகங்களில் சிகப்பு விளக்கு போடுகிறார்கள். (அது வெளியே வெடிக்கும் வெடியின் ஒளி என்று சப்பைக்கட்டு கட்டினாலும் சகிக்கவில்லை.)


யுவன் ஷங்கர் ராஜா  படத்திற்கு இசையாம். சொல்லித்தான் தெரிய வேண்டும். வசனங்கள் பெரிய மைனஸ்.

மொத்தத்தில் படம் எடுத்தவர், நடித்தவர், நடித்த கதாபாத்திரங்கள் -  அனைவரும் முட்டாள்கள்.. இவர்களை விட அதி முட்டாள்(கள்) - பார்த்த நான். பார்க்கப்போகும் நீங்கள்.

வேட்டை -  மெகா சைஸ் ஓட்டை.

Sunday, January 8, 2012

ஆசைகள்

சார், ஒரு சலனமற்ற மாலை வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"வணக்கம் வாசகரே. ஒரு மாலையின் ஆரம்ப வேளையில் என் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து இந்தக்கதையை எழுத ஆரம்பித்தேன்.

"ரம்யா அழகானவள். அவள் ரம்யவாகவே இருப்பதால்தான் அழகோ என்னவோ. தெரியவில்லை. பத்திரிகை போடோகிராபர். ஆனால் இப்போது தன் உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் அவளை மேலும் வர்ணித்து உங்கள் டெஸ்டோஸ்டிரோன்களின் சாபத்திற்கு ஆளாக விரும்பவில்லை. இது அட்ரினலின் தருணம்.

அவள் சற்று நேரத்திற்கு முன்பு எடுத்த போட்டோ, சில பெரிய்ய தலைகளுக்கு தலைவலி குடுக்கக்கூடியவை. அவள் துறைமுகத்தில் எதோ கடத்தல் நடப்பதைப்பற்றி அறிந்த... 'டுமீல்'.. கொஞ்சம் பொறுங்கள். மேலும் விபரம் பிறகு கூறிகிறேன். அவளை சுட முயற்ச்சிக்கிறார்கள்... 'டுமீல்'... மீண்டும் காதடைக்கும் சத்தம்.

இருட்டு. குறுகிய சந்துகளில் ஓடிக்கொண்டிருக்கிறாள் ரம்யா. 'எங்காவது மறைந்துகொள்ள இடம் கிடைக்காதா?' விடுக்கென்று இடதுபக்கம் இருந்த சந்து ஒன்றில் திரும்பினாள் . பிறகு வலது. வலது. இடது. பின்னால் பார்த்தாள். அவர்களை தொலைத்து விட்டேனா? சூப்பர். இல்லை. எதோ குரல் கேட்கிறது.

'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' என்று அதட்டியது ஒரு குரல்.

தப்பிக்க தருணம் இதுதான். சுற்று முற்று பார்த்தாள். அவள் இப்போது வந்தது ஒரு முட்டுச்சந்து. 'Damn!'. தெரு முனையில் ஒரு வீட்டில் இருந்து வெளிச்சம் வந்தது. 'இந்த நேரத்தில் யார் விழித்திரிக்கிரார்கள்?' வீட்டின் கதவு திறந்திருந்தது. விநோதமாக இருந்தாலும் இதுதான் தருணம். தப்பிக்க வேண்டும். விருட்டென்று உள்ளே சென்றாள்.

உள்ளே சென்று கதவை தன் பின்பக்கம் மூடிக்கொண்டாள். திரும்பி, முதல் முறையாக அந்த வீட்டை கவனித்தாள். வினோதமான வீடு. பெரிய்ய ஹால். அவ்வளவுதான் வீடே. பின் சுவற்றில் ஒரு கதவு இருந்தது. அதன் இடுக்குகளில் இருந்து வெளீரென்று வெளிச்சம் கட்டுப்பாட்டுடன் சிந்தியது. அவ்வளவு பெரிய்ய ஹாலும் மிக நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று பூத்த, இன்னும் வாடாத பூக்கள், மர வேலைப்பாடுகள், விஸ்தாரமான இருக்கை...ஓ! அதில் யாரோ அந்தக்கதவை நோக்கி உட்கார்ந்திருந்தார்கள். ரம்யா மெல்ல அவர்கள் அருகில் சென்றாள். பக்கவாட்டாக அந்த சோபாவை கடந்து முன்னாள் வந்தாள். தேநீர் கோப்பையுடன் ஒரு கிழவி.

"வாம்மா.." என்றாள்

"என்ன?!" , ரம்யாவிற்கு இந்த இடம், சூழல், கிழவி, எல்லாம் விநோதமாக இருந்தது. 'பின்ஜாம வேளையில் ஒருத்தி வீட்டிற்க்குள் நுழைந்தால், தேநீருடன், வாம்மா என்று வரவேற்ப்பார்களா என்ன?. முன் பின் அப்படி சென்றதில்லை நான்' என்று நகைத்துக்கொண்டாள்.

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்."

அரை முழுவதும் பரவி இருந்த சன்னமான குளிர் அவளை மேலும் அசௌகரியப்படுத்தியது.

"என்ன?! come again!?"

"உன்னைத்தான் எதிர்பாத்துட்டு இருக்கேன்." , கிழவி.

"என்னயா?"

"உட்காரும்மா.. டீ குடி.. இளைப்பாரு"

விநோதங்களை உதறி விட்டு - "விளையாடாதிங்க பாட்டி. என்னை சிலர் துரத்திட்டு வர்றாங்க. நான் தப்பிக்கணும். பின் பக்கம் ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க.. நான் போய்டறேன்.", என்றாள்.

"கவலைப்படாதே. அவர்கள் உன்னை துரத்த மாட்டார்கள்."

"பாட்டி உங்களுக்கு சொன்ன புரியாது. நான் ஒரு பத்திரிகை போட்டோகிராபர். நான் இன்னை.." என்று கூறியவாரே தன் கமெராவை அனிச்சையாக எடுக்க முயன்றாள். காணவில்லை!!

"ஓடி வருகையில் விழுந்திருக்குமோ?" என்றெண்ணி, கேமராவை தேட வெளிய ஓடத்துவங்கினால்.

"இதைத்தான தேடற?" என்றாள் பாட்டி.

சட்டென்று நின்று திரும்பி, 'ஆமாம்!'... "எப்படி உங்களுக்கு கிடைத்தது" என்றாள் திகைப்புடன்.

"உட்கார். டீ குடி. சொல்றேன்."

"ஐயோ! உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது.. என்னை சிலர் துறத்.." என்று அவள் கூறும்போதே, கிழவி இவளை உற்றுப்பார்த்தாள். கண்கள் விரிய, பெரிய போட்டு, வெள்ளை முடி, சுருங்கிய உடல். கொஞ்சம் பயந்துதான் போனாள் ரம்யா. அமர்ந்தாள். அருமையான டீ.

"உன்னை அதோ தெரிகிறதே. அந்த கதவு வழியாகத்தான் அனுப்பப்போகிறேன்." என்று அந்த வெளீர் இடுக்கு கதவை காண்பித்தாள்.

"தேங்க்ஸ் பாட்டி."

"தேநீர் சுடுகிறதா?" என்றாள்.

"இல்லை பாட்டி. நல்லா இருக்கு. ஆனா சுடலை. சூடா இருந்த இன்னும் சூப்பரா இருந்துருக்கும்."

"இனி சுடாது."

"ம்ம்ம்?" என்றாள் டீ சிப்பிய படி, கோப்பைக்குள்.

நகைத்துவிட்டு, "சரி. உனக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதும் இருக்கா?"

ரம்யாவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் பார்வையும் அதையே சொன்னது.

"உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"என்ன பாட்டி கேட்கறிங்க. அவர் இறந்து போய் பல வர்ஷம் ஆச்சு. இப்போ எப்படி?"

"நீ இறந்து போய் இருபது நிமிஷம் ஆச்சு."

"ஹா..ஹா.. என்ன பாட்டி, நீங்க பாலா படத்துல வர்ற சாமியார் மாதிரியா?. கஞ்சா கிஞ்சா அடிச்சுருக்கிங்களா?"

"இல்லை. உன்னை ஒரு தோட்டா துளைத்து இறந்துவிட்டாய். மார்பில் ரத்தக்கறை இருக்கும் பார்."

இருந்தது.

"அது நான் ஓடி வந்தப்போ நிறைய இடத்துல அடி பட்டுது. அதுல ஒண்ணா இருக்கும்."

"நம்புவதற்கு கடினம்தான். இது ஆன்மாக்களின் உலகம். கொச்சையாக சொல்லவேண்டும் என்றால் ஆவிகள் உலகம். வந்தனம்"

"பாட்டி. தயவுசெய்து விளையாடாதீங்க."

"உனது நிறைவேறாத ஆசைகள்தான் உன்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. அது நிறைவு பெற்றவுடன் நீ இங்கிருந்து விடுதலை அடைவாய். சிலருக்கு நிறைவேறாமலே போய்விடும். அவர்கள் ஆவிகளாகவே இருப்பார்கள். உனது ஆசைதான் என்னென்ன?"

"ஹலோ.. பட்டி. நீங்க இன்னுமா இதெல்லாம் பெனாத்திட்டு இருக்கீங்க? திஸ் இஸ் ட்வென்டி பஸ்ட் செஞ்சுரி. இப்போ வந்து பேய் பூதம்னுட்டு. எனக்கு ரெண்டு காதும் சேத்து 16 ஓட்டை. fashion. இன்னும் குடுத்த இடம் இல்லை. ட்ரை பண்ணாதிங்க."

"பதிநேழாவதர்க்கு ஏற்ப்பாடு செய்கிறேன். வேறேதும் ஆசை? உனக்கு உன் தாத்தாவை பார்க்க வேண்டுமா?"

"கண்டிப்பாக. எங்கே இருக்கிறார்? தாத்தா... தத்தா.." என்று பலமாக சிரிக்க துவங்கினாள்.

"உனது தாத்தாவின் ஆசை உன் கல்யாணத்தை பார்க்க வேண்டும் என்பது. இனி அது நடக்காது. அவர் ஆசையை போக்க பயிற்ச்சிகள் தர வேண்டும். தியானம் செய்தால் தேறிவிடுவார்."

ரம்யாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. " Sorry.. this is too much!"

"சரி நீ நம்ப வேண்டாம். அதோ அந்தக்கதவை திறந்து உள்ளே போ. உனக்கே தெரியும்."

"கண்டிப்பாக. பார்த்துட்டா போச்சு." என்று கட கடவென்று கதவருகில் சென்று திறந்தாள்.

பளீர் வெள்ளை. கண்கள் கூசியது. உள்ளே ஒரு அடி எடுத்து வைத்தாள். அப்போதுதான் அவள் வயிற்றில் ஏதோ பயம் கவ்வியது.
'நல்லா பாத்தியா? போயிட்டாளா? செக் பண்ணுங்கடா' - என்று அவளை துரத்தியவன் கேட்டது ஞாபகம் வந்தது.
'ஒரு வேளை பாட்டி உண்மை சொல்கிறாளோ?'. பின்னால் திரும்பிப்பார்த்தாள்.

"வாப்பா ராஜேஷ். உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்." என்ற பாட்டியின் குரலோடு கதவு மூடிக்கொண்டது. அவள் உறைந்து நின்றாள்.

"ரம்யா!" - ஒரு வயதானவரின் குரல் கேட்டது."

என்ன பார்த்தா? அது யாரு? - அதை படிப்பவர்கள் முடிவு பண்ணட்டும்னு விட்டுட்டேன் சார். நல்லாத்தான சார் இந்த காதை இருக்கு? ஆனாலும் பிரசுரம் ஆகலை. பயங்கரமா வருத்தப்பட்டேன். எனக்கு ஒரு கதையாவது பிரசுரமாகனும்னு ஆசை சார். என்ன பண்றது? ஹும்ம்... ஆனாலும் நான் முயற்ச்சிக்காம இல்ல. இன்னொரு கதை எழுதி அனுப்பினேன். ஒரு பக்கம் வர்ற மாதிரி. அட்லீஸ்ட் அத போடுவாங்கன்னு. அது இதுதான்.

"
ராதா அந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். ராம் மிக மெல்ல அவளை அணுகினான்.

"ராதா நல்லா இருக்கியா?"

அவள் திடுக்கிட்டு,"யார் நீ?" என்றாள்.

"என்னைத் தெரியலை?"

ஒரே க்ஷணத்தில் ராதா கண்டுகொண்டாள். "ராம்!! ராம்..!! நீயா? என்னை பார்க்க வந்தியா? என்னை தனியா போகவிட்டுடியேடா!"

அணைத்துக்கொண்டாள்.

"என்னை மன்னிச்சுடு ராதா. அன்னைக்கு மரணம் கூட என்னை வேருத்துருச்சு..நான் அன்னைக்கு பிழைச்சுருக்கவே கூடாது. பிழைக்க வெச்சுட்டாங்க."

"36 வர்ஷம் காத்திருக்கேன்."

"நான் என் வாழ்க்கைல..ச்ச..", சிரித்து.."நான் இறந்த பிறகுகூட உன்னை சந்திப்பேன்னு எதிர்பாக்கல. ரொம்ப வினோதமா இருக்கு."

"இதென்ன தழும்பு.." என்று நேற்றியைக்காட்டி கேட்டாள்.

"மரணம் தந்த வடு"

"உனக்கு அழகா இருக்குடா." என்றாள்.

"நீ என்னை இன்னுமா ரசிக்கற? நீதான் அப்படியே இருக்க"

"நான் அழகா இருக்கும்போதே போயிட்டேனே..." என்று சிரித்தாள்.

"உன்னை இங்க பாத்ததும், இதுதான் சொர்க்கம்னு நினைச்சுட்டேன்."

"இன்னும் மாறலை நீ.." என்று வெட்கப்பட்டாள். வெள்ளையாக.

சற்று நேரம் காதல் மௌனம்.

"நான் உன்னோட வாழனும்ன்னு ஆசைலதான் இன்னும் இங்க இருக்கேன்."

"வாழரப்போதான் நமக்கு தைரியம் இல்லை..வா இப்போவே வாழலாம்."

"நீ இதை சொல்வன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனா ஆவிகளுக்கு ஆசை தீர்ந்துருசுன்னா, சொர்கத்துக்கோ நரகத்துக்கோ கேளம்பிகிட்டே இருப்பாங்களாம். எனக்கும் உனக்கும் சேந்து வாழத்தான் ஆசை. அப்படி பண்ணோம்னா, நம்ம ஆசைகள் நிறைவேறி, வேற வேற எடத்துக்கு போயிட்டோம்னா?"

"இப்படி ஒரு சிக்கலா?"

சற்று யோசித்துவிட்டு, "நாம ரெண்டுபேரும் சொர்கத்துக்குதான் போவோம். வா. கவலைப்படாதே!"

"நீ ஆவியா வந்து என்னை பாப்பான்னு எதிர்பாத்தியா? இல்லைல்ல? ஏதாவது எதிர்பாக்காம நடந்துருசுன்னா?"

"நீ ஏன் இன்னும் அதே மாதிரி பேசற?"

"பேசாம நாம ரெண்டு பேரும் ஒண்ணுமே பண்ண வேண்டாம். இங்கயே இருந்துடலாம். இப்படியே பேசிட்டு. ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு. உன்னை இதுக்கு மேலையும் பிரிய மனசில்லை."

"இப்படி யோசியேன். ஒரு வேளை நாம ரெண்டு பேரும் சொர்கத்துக்கு போயிட்டா?"

"நீ ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணவன்..சத்யமா நரகம்தான்" என்று சிரித்தாள்.

அவனும் சிரித்துவிட்டு, "எனக்கு நம்பிக்கை இருக்கு. வா!"

"டேய்! புரிஞ்சுக்கோடா என்னால உன்னை மறுபடியும் பிரிய முடியாது.."

"சரி. நாம் எப்போதும் பண்ணுவதை பண்ணுவோமா?"

"என்னது?" என்றாள்.

இரண்டு விரல்கள் நீட்டி - "தொடு" என்றான்.

"பாத்தியா! நீ இப்படியெல்லாம் பேசி எவ்வளவு நாள் ஆச்சு? ஞாபகங்கள் மட்டும்தாண் இருந்துது. இப்போ நீயே வந்துட்ட. என்னை விட்டுடுடா ப்ளீஸ். நான் உன்னை பாத்துட்டே இருக்கேன். போதும்."

"ராதா! சொல்வதை கேள். எனக்கு உன்ன மறுபடி ஏமாற்ற மனதில்லை. தொடு. சொர்கமோ நரகமோ. இருவரும் சேர்ந்திருந்தால் போதும். நான் உன்னோட வாழ வேண்டும்,. தொடு.!"

"அன்னைக்கு வாழறப்போ சாகறதுக்கு தொட சொன்ன. தொட்டேன். இப்போ இறந்ததுக்கு அப்பறம் வாழறதுக்கு தொட சொல்ற. ஆனா ஒண்ணுடா. இப்படி ஒரு crazy conversation நமக்குள்ள நடந்ததே இல்ல. இல்ல? சொர்க்கம் நரகம்ன்னு. எவ்வளவோ சண்டை! ஆனா இது ஒரு மாதிரி புதுசா இல்ல?" சிரித்தாள்.

"தொடு ராதா!"

"வேண்டாமே டா..பயம்ம்மா இருக்கு.."

"தொடு!!!"

தொட்டாள்

"

அவ்வளவுதான் சார். இதுலயும் முடிவு உங்க கைலதான். இந்த கதைக்கு பாராட்டெல்லாம் கெடைச்சுது. ஆனா பிரசுரம் ஆகலை. ஒரு பக்கத்துல இது அடங்காதாம். அட வெங்காயம் ரெண்டு பக்கத்துல பிரிண்ட் பண்ணு! செம்மையா கடுப்பாகிட்டேன் சார்.

நேர பத்திரிகை ஆசிரியரை போய் பாத்தேன். "இதெல்லாம் பழைய சரக்கு சார். புதுசா யோசிச்சு எழுதுங்க" என்றாரே பார்க்கணும். என்ன பண்ண முடியும் சொல்லுங்க? மறுபடி ஒரு காதை எழுதி அனுப்பிருக்கேன்.

ரொம்ப சாதாரண காதை. பார்ப்போம்.

சார் நீங்களே சொல்லுங்க. நான் ரொம்ப நல்லா மனுஷன் சார். இந்த ஒரு ஆசை நிறைவேறாம இப்போ ஆவியா அலையறேன். இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆவிகள்" பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்."

இந்த கதை பிரசுரமாகனும் சார். வேண்டிக்கோங்க. நான் பாட்டுக்கு என் வேலைய பாக்க போய்டுவேன். இந்த "ஆ.வி." பத்திரிகை ஓட ஆசிரியர் ரொம்ப நல்லவர்ன்னு கேள்வி. பார்க்கலாம்.

பாஸ்ட் புட் காதல்

இரவைக்கலைக்கும் முதல் ஒளி..

இலையுதிர் காலத்து முதல் சருகு ..

நீல வானத்தின் மூலை மேகம்..

மலரின் கடைசித் தேன் துளி ..

இவையெல்லாம் உனக்கான என் தேடல்கள்...

ஆனால்,



நீ என்னிடம் கேட்பதெல்லாம்

'பெப்சி'யும் 'பீட்சா'வும் தான்..