Thursday, February 4, 2010

மதுரை முனியாண்டி விலாஸ் Original...

கைநிறைய காசுடன்
வேண்டியதை வரவழைத்து
சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
என் எதிரில் யாரோ ஒருத்தர்
கசங்கிய சட்டையுடன்
'மீன் குழம்பாவது கிடைக்குமா?' எனக் கேட்டு
நிறம் மங்கியபீட்ரூட் பொறியலையும்,
நீர்த்துப் போன கீரையையும்,
என் குற்றவுணர்ச்சியையும்
கலந்து பிசைந்து கொண்டிருக்கிறார்..


No comments:

Post a Comment