Thursday, January 21, 2010

கல்யாணம்: ரூபாய் ஒரு கோடி!


இன்டர்நெட்டில் தேடு,
ஹிந்து பேப்பரில் போடு,
இருப்பதிலே நல்லா வரனை தேடு..
*********
பத்தும் பொருந்தாவிட்டாலும்
பாதியேனும் பொருந்துதா பாரு..
*********
நல்லா குடும்பமா?
நமக்கு ஒத்து வருமா?
நம்ம ஜாதியா?
வசதிக்கு கொற உண்டா?
*********
நம்ம புள்ள பி.ஈ.
அட்லீஸ்ட் எம்.பீ.ஏ வேணாமா?
பாரின் இல்லாட்டியும்
பெங்களூரு பரவாயில்ல..
*********
எப்படியோ தகஞ்சிடுச்சு..
எடமும் நல்லா எடமா போச்சு,
இப்பவே அறுபது வாங்கறான்
எப்படியும் வெளிநாடு போவான்..
*********
எம்.எல்.ஏ க்கு பத்திரிகை வை..
கவுன்சிலரை கூப்டாச்சா?
கட்சிக்கு ஒரு ஆள் நிச்சயம் வந்தாகணும்..
வராட்டியும் பரவல்ல, வேட்டிய மட்டுமாது அனுப்புங்க..
சொந்தக்கரனுக்கு தபால்ல போடு.. எப்படியும் வருவானுங்க..
*********
சென்னையில கல்யாணம்..
ஏ சி ஹால் ரெண்டு லட்சம்..
சொந்த ஊருக்கு ரெண்டு மூணு பஸ் அனுப்பு...
தெருவெல்லாம் ப்ளெக்ஸ்ஸ போடு..
ஜானவாசம் வரவேற்ப்பு
மறுநாள் காப்புக்களைப்பு..
*********
ஊரையே முழிக்க வைக்கணும் நம்மளோட செல்வாக்கு..
மொய் நோட்டில் பொய் எழுதி கருப்பெல்லாம் வெளுப்பாக்கு..
*********
இன்னைக்கு கல்யாணம்...

மாப்பிள்ளைக்கு வைர மோதிரம்,
பொண்ணுக்கு ஒட்டியாணம் (மட்டும் 10 பவுன்,மொத்தம் 300),
நாதஸ்வரம் நலம்பாட
"குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா.."
*********
வந்திருக்கும் அனைவரையும் வரவேற்க நாலு பேரு..
சந்தனமும் குங்குமமும் பன்னீரும் தூவவேனும்...
தெரிஞ்சவனோ தெரியாதவனோ
"வாங்க வாங்க.. சாப்டிங்களா?" அவ்வளவுதான்..
*********
காதை கிழிக்கும் சவுண்டு செட்டும்
கண்ணை பறிக்கும் தோரணமும்
வாழ்த்த வந்தவரின் நெனப்பெல்லாம்,
"எப்படியும் ஒரு கோடி இருக்கும்ல?"
*********
முகூர்த்தம் நெருங்கிவிட,
எம்.எல்.ஏ வும் வந்துவிட, அவர் தாலி எடுத்து கொடுக்க,
"கெட்டிமேளம் கெட்டிமேளம்", ஐயரின் குரலுக்கு
அதிர்ந்தது மண்டபம்..
*********
வீடியோக்கரர்கள் சூழ்ந்துகொள்ள மணமக்கள் தெரியவில்லை..
திரையில் காண்பித்தார்கள்.. அட்சதை தூவினோம்..
*********
பின் வரிசை அட்சதைஎல்லாம் முன் வரிசை மண்டையில்,
முதல் வரிசை அட்சதை எல்லாம் காமேரக்காரன் மண்டையில்...

விழுந்த ஓரிரு அரிசியையும் மணமக்கள் தட்டிவிட,
இனிதே முடிந்தது திருமணம்!!
*********
பெண்ணை அனுப்புவதே பெற்றோரின் கடமையென..
கணவனுக்குத்தேவை காசும் பொருளுமென..
சுற்றத்திற்குத்தேவை சுவையான உணவுமென...
திருமணங்கள் நடந்ததெல்லாம் இதுவரைக்கும் இப்படித்தான்...
*********

சாதியையும் சாதியையும் சேர்ப்பதா திருமணம்?
மதமும் மதமும் இணைவதா திருமணம்?
பணமும் பணமும் பார்ப்பதா திருமணம்?
சொத்தும் சொத்தும் கை கோர்ப்பதா திருமணம்?

இல்லை...மனமும் மனமும் மகிழ்வதே திருமணம்..

நாணுகின்ற பெண்ணுக்கு கழுத்ததனில் தாலி...
ஆணுக்கு நடக்கின்ற ஒழுக்கம்தான் வேலி..
ஆடம்பர அசிங்கங்கள் இனியேனும் ஒழியட்டும்..
திருமணங்கள் இனி நடந்தால் இப்படியே நடக்கட்டும்...!!

PS: Dear Readers! Happy new year btw! :D

6 comments:

  1. it is so true... romba nanna irruku.. one of the best of ur work so far, I shud say!!! I loved reading it.

    ReplyDelete
  2. கசப்பான உண்மை !

    ReplyDelete
  3. dei sooper post!

    ReplyDelete
  4. Vedhanai kalantha appattamana unnmai

    Soopera sonna bharathi...

    ReplyDelete
  5. மல்லி கனகம் சாமந்தி 'பூ'மா பூ
    பள்ளிச்சீருடையில் பூ விற்று கொண்டு இருந்தால்
    அந்த எட்டு வயது சிறுமி

    அக்கா வெள்ளிகிழமை அதுவுமா தலைய விரிச்சு விட்டு போறீங்களே
    பூ வெச்சுட்டு போங்க, அம்சமா இருப்பீங்க;
    ஏளனமாய் சிரித்து விட்டு போனால் அந்த 'tshirt ' அழகி

    உலகத்திலேயே இரண்டாவது பெரிய கடற்கரையை
    இவள் சினன் சிறு கால்கள் சுற்றித் திரிந்தாலும்
    பூக்களை விற்க முடியாமல் பூக்களோடு வாடினாள்
    அங்கு பாட புத்தகங்களை விட பூக்கள் கனமாக இருந்தது

    'Sumo ' வில் வந்து இறங்கிய அந்த இரண்டு பெரிய மனிதர்கள்
    இவள் வைத்து இருந்த மொத்த பூவையும் பேரம் பேசாமல் வாங்கிச் சென்றார்கள்
    கண்களில் மிக்க மகிழ்சியோடு அவள் எதிர்நோகினாள்
    'Sumo ' வில் 'கல்யாணம்: ருபாய் ஒரு கோடி' என்று இருந்தது

    பூ விற்கும் சிறுமி முதல் உங்கள் தாய் தந்தை வரை
    அனைவரையும் மகிழ வைக்கும் ஒரே தருணம், திருமணம் ஒன்றே
    அதை மிகையாக செய்வதும் நன்றே
    சாதி மதம் பார்த்து செய்த திருமணம் என்றாலும்
    பணம் மட்டும் எதையும் சாராமல் அனைவரையும் போய் சேரும்

    இரு மனம் சேர்ந்தால் தான் அது காதல்
    பலர் மனம் குளிர்தால் தான் அது கல்யாணம்
    பெருகி வரும் காதல் கல்யாணங்களில்
    ஆடம்பர கல்யாணமும் நடக்கட்டும்

    முடிந்தவர்கள் காதலிப்பது போல்
    இருப்பவர்கள் செலவளிக்கட்டுமே!!!

    ReplyDelete
  6. Adangu da dei.....Un Kalyaanam evlo aadambaramaa nadakka poguthu nu unga amma kita naan ketukaren.....Vaira necklace..Marandhutiyaa?:)...

    Goyya dei...Un kalyaanam...will be grand in some way or the other...

    ReplyDelete