Showing posts with label வீணையடி நீ எனக்கு. Show all posts
Showing posts with label வீணையடி நீ எனக்கு. Show all posts

Monday, July 23, 2012

வீணையடி நீ எனக்கு...

வீணையடி நீ எனக்கு...

பாடல் வரிகள் :பாரதியார்  
குரல் : யேசுதாஸ், 
நீரஜா 
இசை: வைத்யநாதன்

பாயுமொளி நீ எனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு, 
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா! 

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு 
பூணும் வடம் நீ எனக்கு, புது வயிரம் நானுனக்கு; (2)

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு

வானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு
பானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞானஒளி வீசுதடி நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு  நல்லழகே! 
 நல்லழகே!
ஊனமறு  நல்லழகே ஊறுசுவையே கண்ணம்மா

காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு
வேதமடி நீ யெனக்கு வித்தையடி  நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடிவானவளே ! நாதவடிவானவளே !

நல்ல உயிரே கண்ணம்மா !

வீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு