Saturday, August 8, 2009

பாலகாண்டம்

சிறுவர்களின் உலகம் மிகவும் சிறியது. சலனமற்றது. இயல்பானது. பயம், அச்சம், அவமானம், தோல்வி,காதல், எதிர்காலம்.. எதுவும் அவர்களுக்கு தெரியாது. அவர்களது அதிகபட்ச பயம் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது கண் முன்னால் பிம்பங்களாக கையில் பிரம்போடு வரும் கணக்கு வாத்தியார்கள்தான்.. குழந்தைப் பருவத்தின் புதிர்களை கேள்விகள் ஆக்ரமித்தன.. நிறம் என்றால் என்ன? இசை என்றால் என்ன? வாசனை? தூக்கம் ஏன் வருகிறது? இன்று இரவு பூரி கிடைக்குமா? அவ்வளவுதான் அவர்களது கேள்விகள்.. இவை அனைத்திற்கும் பதில் இருந்தாலும் இல்லாமல் போனாலும் கேள்விகள் இருந்துகொண்டே இருக்கின்றன..

முதன் முதலில் 'மர'த்திற்கு 'மரம்' என்று பெயர் வைத்தவனுடைய பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போனது மாதிரி, கால ஓட்டத்தில் கேள்விகள் தொலைந்து பயங்களாக மாறுகிறது..

எண்ணங்களில் பின்நோக்கி செல்கையில், அதோ அங்கு ஒரு சிறுவன் டி .வி.யில் 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்த்துக்கொண்டிருக்கிறான்... மனதில் எள்ளளவும் சலனம் இல்லை.. அவனது முழு கவனமும் டாம், ஜெர்ரியை பிடித்துவிடுமா? ஜெர்ரி எப்படி தப்பிக்க போகிறது? என்பதில் இருக்கிறது.. நன் அவன் அருகில் அமர்ந்ததை அவன் கவனிக்கவில்லை.. கண் முன்னாள் கைகளை அசைத்தேன்.. ம்ஹூம்...பிரயோஜனம் இல்லை... அருகிலேயே, அவன் சற்று முன் வரைந்து, பாதியில் விட்டிருந்த ஓவியம் இருந்தது. கூடவே சார்ட்,பென்சில், ரப்பர், வாட்டர் கலர். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து அவனுக்கு ஒரு கடிதம் எழுதினேன்..

வணக்கம்..

நல்லா இருக்கியா? உனக்கு என்ன வயசு? 8? 9? நான் நல்லா இருக்கேன்..இது உனக்கான கடிதம். முடிந்தால் நீ மட்டும் படித்துவிட்டு கிழித்துவிடு. உனக்கு என்னைத்தெரியாது. அனால் எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்.

நீ நன்றாக படம் வரைவியமே? ம்ம்ம்.. இதோ இந்த படத்தை ஏன் பாதியில் விட்டு விட்டாய்? இப்போது உனது வீட்டின் பரணில் புழுதி படர்ந்து இப்படியே இருக்கிறது.. முடிந்தால் முடித்து விடு. பிற்காலத்தில் நீ ஓவியம் வரையப்போவதில்லை.. பாட்டு கிளாஸ் ஒழுங்கா போக மறுக்கிறாயா? சென்றுவிடு. பின்னாளில் அடிக்கடி வருத்தப்படுவாய்.. நேற்று நீ 'காளி'யுடன் 'டூ' விட்டாயாமே? நாளைக்கே 'பழம்' விட்டு விடு.. 10 வயதிற்கு மேல் அவன் வேறு திசை, நீ வேறு திசை.. உனக்கு மிகவும் பிடித்த அந்தக் கரடி பொம்மை கொஞ்ச நாளில் தொலயப்போகிறது... கவலைப்படாதே. இரண்டு தினங்கள் அழுவாய். பிறகு பழகிவிடும்.

இன்னும் பதினைந்து வருடத்திற்குள் நீ அமெரிக்கா செல்ல இருக்கிறாய் தெரியுமா? உனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் போவதில்லை. உன் அம்மாவின் வைராக்கியத்தை தகர்க்க போகிறோம் என்று அறிவாயா? உலகின் மிகப்பெரிய ஏரியில் குளிக்கப்போகிறாய் தெரியுமா? நயாகரா என்றால் என்னவென்று தெரியுமா? :)



இன்னும் ஓர் ஆண்டில் நீ வேறு பள்ளி செல்ல இருக்கிறாய். அதன் அச்சம் அறிவாயா? புதிய நண்பர்கள், புதிய சூழல், புதிய அனுபவம் வரப்போவதை உணர்வாயா? அவர்களில் சிலர் இருப்பார்கள் சிலர் விடுப்பார்கள் சிலர் கொடுப்பார்கள் சிலர் எடுப்பார்கள் புரிவாயா? தெரிந்தோ தெரியாமலோ நீ மற்றவர்களுக்கு இழைக்கும் தவறுகளை ஜீரணிக்க முடியுமா உன்னால்?

இரு.. எங்கே போகிறாய்?.. ஹா ஹா.. லட்டு எடுத்து வரவா? இப்போதே குறைத்துக்கொள். நீ சைட் அடிக்கப்போகும் பெண்கள் உன்னயும் சைட் அடிக்க வேண்டுமெனில் :) வாய் நிறைய லட்டு.. கண் முழுக்கச் சிரிப்பு.. இதயம் முழுக்க மகிழ்ச்சி.. வரமடா இது.. அனுபவி! அட! இதை அனுபவிக்கத் தெரியுமா உனக்கு?

பள்ளியின் farewellன் போதும், கல்லூரியின் இருதியாண்டிலும் சிறு களங்கங்கள் வருவதை உணர்கிறாயா? ஒரு பெண்ணிற்க்காக தலை மயிர் துறப்பாய் எனத்தெரிந்தால் இப்போது இவ்வளவு நிம்மதியாக இருப்பாயா? நண்பனின் துரோகம் தாங்க முடியுமா உன்னால்? உன் பதின்ப வயதின் கனவு மிகப்பெரியது. கனவுகளைத் துரத்த தெம்பு இருக்கிறதா?

நான் இப்போது பார்க்கும் சிறுவர்கள் போல் நீ இல்லை. உனக்கு இன்டர்நெட் தெரியாது. கம்ப்யுட்டர் தெரியாது. பவர் ரேஞ்சர்ஸ் தெரியாது. உன் உலகம் மிக ஏளிமையானது. சில சமயம் பொறாமையாகக் கூட இருக்கிறது. இவ்வளவு கேள்விகள் இல்லை உன்னிடம். இவ்வளவு குழப்பங்கள் இல்லை. உன்னிடம் சில விஷயங்கள் சொல்ல வேண்டும். இப்போது புரியாவிட்டாலும் மனதில் வைத்துக்கொள்.

எதிர்காலம் எப்போதும் நிலையற்றது. புரிந்துகொள். கொஞ்சம் கோபம் தவிர். நிதானம் கொள். மேலும் மேலும் கனவு காண். ஒரு நாள் நடக்கும். நண்பர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய். ஒன்றும் எதிர் பார்க்காதே. எதிரிகளைப் பேசவிடு. சிறு நீர் களிக்கையில் சிரித்துக்கொள்.

பொறாமைப் படுபவர்களைக் கண்டு கோபப்படாதே. அது ஒரு வகையான பாராட்டு. துரோகங்களை மன்னித்து விடு. மறக்காதே. முடிந்தால் 10ம் வகுகப்பிற்கு பிறகும் ‘ஜெயா' missசிடம் ட்யூஷன் போ. 8ம் வகுப்பிற்குப் பிறகு ‘தமிழை' இரண்டாம் மொழியாகப் பயில். பின்னாளில் தமிழ் உனக்கு பிடிக்கும். ஆனால் படிக்க முடியாமல் போகலாம்.

Shuttle, Piano, Skating, Cricket, Swimming, Vocals எதையும் முழுசாக கற்றுக்கொள்ள மாட்டாய். தவறு. தயவு செய்து ஏதேனும் ஒன்றை முழுமையாக கற்றுக்கொள். நிறைய புத்தகங்கள் படி.

பயணம் செய். பயணங்கள் தரும் அனுபவங்கள் வேறு எப்படியும் கிடைக்காது.

உறவுகளை கொஞ்சம் நேசி. நண்பர்கள் - இருப்பார்கள். உறவுகள் - எப்போதும் இருப்பார்கள். ரொம்பவும் நேர்மையாக இருக்காதே. பிழைக்கக் கற்றுக்கொள். முடிந்தவரை உதவி செய். எதையும் கற்றுக்கொள். மூச்சுத்திணரப் படி. திகட்டத் திகட்டக் காதலி ( ஒரு வேளை, காதலி அமைந்தால் :))..

இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்கிறாய் என்று கேட்கிறாயா? உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். உந்தன் திறன் எனக்குத் தெரியும். மேலும் என்னால் மட்டும்தான் உன்னிடம் இவைகளைச் சொல்ல முடியும்...

இதோ இந்தக் கடிதத்தை உன் அருகில் வைத்திருக்கிரேன்.. முடிந்தால் படி... புரிந்தால் நட...

ஒரு ரகசியம்: இன்று இரவு உனக்க்குப் பிடித்த தக்காளி கொத்சும் இட்லியும் தான் :)

இப்படிக்கு,12 வருடத்திற்குப் பிறகு,

கால நதியின் எதிர்காலத்தில் கல்லெரிந்துகொண்டும்... கடந்த காலத்தில் மீன் பிடித்துக்கொண்டும்..

நீ...


12 comments:

  1. i spotted 2 spelling mistakes.. dunno if it was 'cos of the editor..


    1. "unakku enna vayasu" , at the beginning of the letter, enna is spelt with 3 suzhi na instead of 2 suzhi..
    2. at one other place... "maelum maelum" ku "melum melum" nu irruku..


    the article is good...

    ReplyDelete
  2. Its a wonder full life padam paathu mudicha udane unakku enna thonuchu....? bloga padichappayum appudi dhan thonuchu..
    naane enakku yeludhina maadhiri..
    skating karate piano.. namakkulla neraiya coincidence irukku machi..

    ReplyDelete
  3. @ preethi - thanks. correct panniten :)

    ReplyDelete
  4. laddu kuraitthuk kol....spelling mistake dhaane adhu..Naanum unna maadiri 8th varaikum dhaan da tamil ppadichaen:)..But nice one...

    ReplyDelete
  5. semma nalla irunthuchu

    ReplyDelete
  6. nice post da.. neraya kathuka vendiadha miss panitenonu feel panren

    ReplyDelete
  7. good da...:) wish i 'd have got a letter like this before.. :)

    ReplyDelete
  8. awesome batty.. கடந்த காலத்தில் மீன் பிடித்துக்கொண்டும்.. intha oru line pothum :)

    ReplyDelete
  9. Sujatha oda saayal irukku. We need to come out of it. Romba kashtam than :)

    ReplyDelete