Monday, January 28, 2013

கவிதை அல்ல.. ஆக்கிக்கொள்ளலாம்... - 17

"இரு இரு..", என்றது 
இலை..
"இதோ - இரண்டே நிமிடத்தில்
இடைஞ்சல் களைகிறேன்.."

"விடு விடு..", என்றது 
வானம்..
"விருட்டென்று கொஞ்சம் 
சிவந்து கொள்கிறேன்..."

"பொறு பொறு..",என்றது 
ஆறு..
"சற்றே பொறுத்திரு 
இசைந்து தவழ்கிறேன்.."

சிடு சிடு - த்தது  
சூரியன்...
"ஒரே நொடியில் 
மங்கி மிளிர்கிறேன்.."

அலைகள் இல்லாத 
கவலையில், காற்றை 
"கொடு.. கொடு" என்றது 
கடல்..

காற்று தந்த அலையை 
தன்னை 
"தொடு தொடு" என்றது 
கரை 

அலங்கார சடங்குகள் எதிலும் 
அசராமல், என்னை  
"எடு எடு" என்றது 
மலை..

.....





புகைப்படங்களில் அடைக்கப்படும் முன் 
இலைகளுக்கோ 
மலைகளுக்கோ 
நதிகளுக்கோ 
மேகங்களுக்கோ 

யாரேனும் 
புன்னகைக்க அவகாசம் கொடுத்தீர்களா?



1 comment:

  1. Bharathi, ithai yellam oru folder-l sehari. Digital book-a publish pannalaam.
    Nice.

    ReplyDelete