Friday, January 4, 2013

புலனடக்கம்


வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
கூழாங்கற்கள் சேமிக்கத்தொடங்கினேன் ..

சிந்தும் மழைத்துளி
ஒவ்வொன்றிலும்
சிக்கியிருக்கிறது மேகம்..

உள்ளங்கைக் குழியில் 
அள்ளிய தண்ணீரில்
ஓடிக் கொண்டிருக்கிறது நதி..

உதறிய சிகரெட்டின் 
சிணுகும் கங்கில் 
சிதறி விழுகிறது சூரியன்..

















தனது 
மிச்சத்தை எப்போதும்
குச்சிகளில் விட்டுவைக்கிறது
மரம்...

அதேபோல்..

உருட்டித்திரட்டி 
நீரில் உலுக்கி 
படுவிக்கிடக்கும் கூழாங்கற்களில் 
பிண்டமாய் கிடக்கிறது அண்டம்  
...

எது எப்படியிருந்தென்ன?

நிகழ்ந்தபடியிருக்கும்
நிகழ்வுகளனைத்தின் முடிவிலும்
தக்க வைத்துக் கொள்ள
என்ன இருக்கிறது?

இனிப்பும் கசப்பும் சலிப்புமாய் 
சில நினைவுகளைத் தவிர..
......
......
......
......
......
வாழ்வைச் சுவாரஸ்யமாக்குகிறேன்  
பேர்வழி என்று
மரக்குச்சிகள் சேமிக்கத்தொடங்கினேன் ..


2 comments:

  1. Kavithai miha pramaatham.
    "இனிப்பும் கசப்பும் சலிப்புமாய்
    சில நினைவுகளைத் தவிர.."

    marukkireen. nee ninaithal thadangal vittuchellallaam...Chithi

    ReplyDelete
  2. How does it relate to pulanadakkam?

    ReplyDelete