Sunday, November 1, 2009

ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது வெகு சுலபம்

ஒரு சிட்டுக்குருவியைக் கொல்வது
வெகு சுலபம்

முதலில் உள்ளங்கை நிரம்பிய
தானிய மணிகளால் அதைக்
கவர்ந்திழுக்க வேண்டும்.

ஆகாயத்தை விடவும்
கூண்டு பாதுகாப்பானது என்று
நம்பச் செய்ய வேண்டும்.


சுவாதீனம் படிந்த பிறகு,
எதிர்பாராத தருணமொன்றில்
அதன் சிறகுகளைத் தரித்துக்
குப்பையில் வீச வேண்டும்,
தூவிகளில் ஒட்டிய
ஆகாயக் கனவுகள் மட்கும் வண்ணம்.



பிறகு
அதன் கால்களை ஒடித்துவிட வேண்டும்
உயிர்வாழும் வேட்கையால்
நடந்தேனும் இரைதேட விடாதபடி.

அடுத்ததாக,
அதன் அலகை முறித்து விடுவது நல்லது
தானாய் வந்து
சிக்கும் இரையைப் பிடிப்பதையும்
தடுத்து விடலாம்.

இப்போது சிட்டுக்குருவி
ஒரு கூழாங்கல் ஆகிவிட்டது
சிறு வித்தியாசத்துடன்.

கல்போலின்றி, பறந்த நாட்களை
நினைவு கூரும் குருவி.

பூர்விக நியாபகம் போல
உயிர் துடிக்கும்
அதன் கண்களில்.

இனி நீங்கள் செய்ய வேண்டியது
ஒன்று தான். குருவிமிச்சத்தைத்
தரையில் இட்டுக் காலால் தேய்த்துவிட வேண்டும்.

சிட்டுக்குருவியைக் கொல்வது,
ஒரு நட்பையோ,
ஒரு ஆன்மாவையோ,
ஒரு அன்பையோ,
முறிப்பது போல,
மிக மிகச் சுலபம்..

- நன்றி - யுவன்

5 comments:

  1. romba affect pannuchu intha poem.. last stanza mattum than ennodathu!

    ReplyDelete
  2. Very touching especially the last stanza

    ReplyDelete
  3. மனிதா
    நீ உன் தாய்மொழியை பேசாதே.
    உன் கடவுளை வணங்காதே.
    உன் கலாசாரத்தை பின்பற்றாதே
    உன் முதாதையர் மூடர்கள்,
    இன்று முதல் நீ பரிசூத்தன் ஆகிறாய்.
    உன் விடுதலை இழக்கிறாய்.

    ReplyDelete
  4. ethukku gan inthe comment? enakku puriala!

    ReplyDelete